கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வரும் ராஜா வெற்றி பிரபுவும், தீபிகா வெங்கடாசலமும் திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றத் தொடர் கனா காணும் காலங்கள். பள்ளிப்பருவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடர் வெற்றிகரமாக ஓடியது. இதில் நடித்த நடிகர்கள் தற்போது சின்னத்திரை சீரியல்களில், முன்னணி ஹீரோ, ஹீரோயின்களாக கலக்கி வருகிறார்கள். முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, கல்லூரி கால நட்பை மையமாக வைத்து கனா காணும் காலங்கள் சீரியல் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்: ‘உனக்கு நான்; எனக்கு நீ’: 2 மாத குழந்தையுடன் ஷூட்டிங் போகும் ‘செவ்வந்தி’ சீரியல் நடிகை திவ்யா

இந்த கனா காணும் காலங்கள் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு. இதில் தீபிகா அபி என்கிற கேரக்டரிலும், ராஜா வெற்றி பிரபு கெளதம் என்கிற கேரக்டரிலும் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் தான் தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தீபிகா- ராஜா இருவரும் ஒரே சீரியலில் நடித்தாலும் காதலித்து திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இருவருமே கடந்த 6 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவரது வீட்டிலும் அவர்களுக்கு வரன் பார்த்து வந்துள்ளனர். இதைப்பற்றி பேசும்போது இருவருமே நாம் ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது என கேட்க, உடனடியாக வீட்டில் பேசி ஒருவாரத்தில் திருமணம் செய்ய முடிவு எடுத்து, இந்த திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில், தீபிகா – ராஜா வெற்றி பிரபு தங்களது திருமணத்தில் எடுத்த ரீல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ ஒன்றில் திருமணம் முடிந்து இருவரும் சாப்பிட அமர்ந்திருக்கின்றனர். அப்போது தீபிகாவின் கழுத்தில் உள்ள தாலியை சுட்டிக்காட்டி ராஜா வெற்றி, இது நான் கட்டுனது, உன் கதை முடிஞ்சது என ஜாலியாக சொல்கிறார். இதற்கு தீபிகா இரு மவனே என்பது போல் ரியாக்ஷன் கொடுத்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல், தீபிகாவின் தோழிகள் ராஜா வெற்றியை மேடையில் தனியாக தவிக்க விட்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தீபிகாவின் தோழிகள் அனைவரும் மேடையில் போட்டிருந்த சோபாவில் ஒன்றாக அமர்ந்து போட்டோ எடுத்தபடி ராஜா வெற்றி பிரபுவை தனியாக தவிக்க விட்டு காத்திருந்தனர். அப்போது ராஜா வெற்றி பிரபு சோகமாக முகத்தை வைத்தபடி பாருங்களேன் என்கிற மாதிரி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil