Naam Iruvar Namakku Iruvar: 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் இதெல்லாம் ரொம்ப முக்கியமான்னு கேட்கற மாதிரி இருக்கு மாயனின் செயல். இப்படி ஒரு புருஷனை வச்சுக்கிட்டு தேவி குப்பை கொட்டியாகணும். பல்லு இருக்கறவன் பட்டாணி சாப்பிடறான்னு மாயன் பாணியில் விட்டுட்டு போவானா?, அவனே இதை நோண்டிகிட்டு இருக்கான் பாருங்க. புது வீட்டுக்கு மாமா சந்தன பாண்டியன் குடும்பத்தை அழைச்சுக்கிட்டு வந்துட்டார். இப்போ பார்த்து அவரோட ரெண்டாவது சம்சாரமும் வீட்டுக்கு வந்து, தங்கிட்டு போறேன்னு வந்து இருக்காங்க.
’2 வாரங்களாக சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்’ – கமல் விளக்கம்
வீட்டுக்கு வந்தவங்க வேண்டாத விருந்தாளியா இருந்தாலும் அவங்களை உபசரிப்பதுதானே நம்ம பண்பாடு? இவங்க அவரோட ரெண்டாவது சம்சாரம் வேற. ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்காங்க. அவங்களுக்கு ஒரு ரூம் ஒதுக்கித்த தர முடியாத அளவுக்கு குறுகிய மனப்பான்மை உள்ளவரா நம்ம சந்தன பாண்டியன்? அட அவங்ககளுக்கு வசதியா ஒரு ரூம் ஒதுக்கிக் குடுத்துட்டார். இது பொறுக்கலை நம்ம மாயனுக்கு. ரூமை ஒதுக்கித் தந்த நம்ம மாமா ராத்திரி எங்கே தங்கி இருந்திருப்பார்? இதுதான் அவனது மண்டையை ரொம்ப நேரமா குடையும் ஒரு கேள்வி.
இந்த கேள்வியை தேவியிடம் கேட்டுட்டு இருக்கும்போதே மாமா சந்தன பாண்டியனும் வந்துட்டார். தேவிக்கு ஒன்னும் சொல்ல முடியலை. என்ன பேசிகிட்டு இருக்கீங்க என்று மனுஷன் தானாக வாயை விட, ஒன்னும் இல்லை மாமா.. ரொம்ப வருஷம் கழிச்சு சின்ன அத்தை வந்து இருக்காங்க என்று இழுக்கிறான். அவரும் ஆமாம் என்பது போல ஆமோதிக்க, நீங்க புது வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தீங்களா, பெரிய அத்தைக்கு அட்டாச் பாத்ரூமோட ஒரு ரூமை ஒதுக்கிக் குடுத்துட்டீங்க என்று மீண்டும் இழுக்கிறான். அவரும் ஆமாம் என்று சொல்கிறார்.
சின்ன அத்தைக்கு பக்கத்திலேயே ரூம் ஒதுக்கிக் குடுத்துட்டீங்க. நேத்து நீங்க என்று சொல்ல வர, டேய்.. என்று தேவி அதட்டுகிறாள். இல்லை மாமா நேத்து மட்டும் இல்லை. அத்தையை முதல் முதலில் நீங்க எங்கே பார்த்தீங்கன்னு பிளேட்டை மாத்திட்டான். சரக்கு இல்லன்னா இப்படியெல்லாம இழுப்பீங்க?
டிரடிஷனல் சஞ்சிதா, விண்டேஜ் பூஜா – படத் தொகுப்பு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"