Advertisment

’2 வாரங்களாக சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்’ - கமல் விளக்கம்

”வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக கடந்த இரண்டு வாரங்களாக நான் தனிமைப்படுத்துதல் மேற்கொண்டு இருக்கிறேன்.”

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamalhaasan quarantined?, corona virus

kamalhaasan quarantined?, corona virus

Kamal Haasan : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

டிரடிஷனல் சஞ்சிதா, விண்டேஜ் பூஜா – படத் தொகுப்பு

கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான தீவிர சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதோடு வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதனால் அவ்வாறு வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழின் மூத்த நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான, கமல்ஹாசனின் வீட்டில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில், மாநகராட்சி ஊழியர்கள் இந்த நோட்டீசை ஒட்டி இருந்தனர். அதில், ’கொரோனாவில் இருந்து எங்களை காக்க, சென்னையை காக்க எங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த நோட்டீசை அகற்றினர். கமலின் பழைய முகவரி என தெரியாமல் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசுக்கு உதவ விரும்புகிறீர்களா?

இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில், ”உங்கள் அனைவரின் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி. எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லை என்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மையத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்ட தாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும்,  வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக கடந்த இரண்டு வாரங்களாக நான் தனிமைப்படுத்துதல் மேற்கொண்டு இருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Corona Virus Kamal Haasan Makkal Needhi Maiam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment