Vijay TV Pandian Stores : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ஒரு தும்மல் போட்டதும் வீடே அல்லோலப் பட்டு விட்டது. மீனா அரிசியை கீழே கொட்டிட்டா, கண்ணன் அய்யோன்னு தள்ளி ஓடிட்டான். எல்லாம் கொரோனா வைரஸ் படுத்தும் பாடு. ஊரெல்லாம் கட்டுப்பாடு. யாரும் வெளியில் வரக்கூடாதாம். பஸ்ஸெல்லாம் இல்லை. சென்னைக்கும் போக வேண்டாம். ஒண்ணும் வேண்டாம். வீட்டுக்கு போங்கன்னு மூர்த்தி அண்ணன் கதிர் முல்லையை வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டார். வீட்டில் வந்து உட்கார்ந்த முல்லை அச்சுன்னு ஒரு தும்மல் போட்டா, கண்ணன் ஓடியே போயிட்டான்.
’ஈரமான ரோஜாவே’ : மலரோட இந்த அவதாரம் எப்படி இருக்கு?
இது சரி வராதுன்னு முல்லை பெட்ரூமில் போயி தன்னை தனிமை படுத்துகிட்டு உட்கார்ந்துட்டா. இங்கே மீனா தனியா சமைக்கிறேன்னு பெருமை பீத்திக்கிட்டு, அதை போட்டு உடைக்கறதும், இதை போட்டு உடைக்கறதும்னு ஒரே சத்தம். தனம் ஷூட்டிங்கே வரல போல இருக்கு. என்ன குட்டி அண்ணி, தட புடலா சமைக்கிறீங்க போல இருக்கு. சத்தம் ஊரை கூட்டுதே. வாசனை ஒன்னும் காணோமேன்னு சொல்லாமல் சொல்லி கேட்கிறான் கண்ணன். முல்லை போயி படுத்துகிட்டாங்க. நான் மட்டுமே தனியா சமைச்சுக்கிட்டு இருக்கேன்னு வாயை கோணலாக்கி கழுத்தை நொடித்து நொடித்து சொல்றா மீனா.
இதை கேட்டு வந்த கதிர், என்ன தனியா வந்து இங்கே உட்கார்ந்துட்டே, அங்கே சத்தமா கிடக்குன்னு கேட்கிறான். லேசா கோல்டா இருந்துச்சுங்க, அதான் தனிமை படுத்திகிட்டு இங்கே வந்து உட்கார்ந்துட்டேன்னு சொல்றா முல்லை. சரி சரி ஒன்னும் பயப்படாதே. தண்ணி அடிக்கடி குடி. ஒன்னும் இருக்காதுன்னு சொல்லி கதிரும் படுத்தானே தவிர, என்னடா இவ பாட்டுக்கு பய முறுத்தறாளேன்னு இவன் பயந்துகிட்டு படுத்துகிட்டான். நாட்டில் மக்களின் நிலைமையும் இப்படித்தான் இருக்குது.
தொழிலாளர்கள் வங்கிக்கணக்கில் பணம், 7 கிலோ ரேஷன் அரிசி: மத்திய அரசு திட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”