Tamil TV Serials: விஜய் டிவியின் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை, கதிர் ரொமான்ஸ் பண்ணித்தானே பார்த்து இருக்கீங்க... வெறித்தனமா சண்டை போட்டு பார்த்து இருக்கீங்களா? முல்லைக்கு வண்டி ஓட்ட தெரியலை.. கதிர் என்ன தான் கத்துக் கொடுத்தாலும் முல்லைக்கு பயம் போகலை. அப்போதுதான் கதிர் கண்ட மேனிக்கு திட்டறான். பயப்படாம ஒரு வண்டி ஓட்ட தெரியாதான்னு கேட்கறான். என்னங்க.. இப்படி திட்டுறீகன்னு முல்லை பயந்து கேட்கிறாள். நீதானே ரோஷம் வர்ற மாதிரி திட்டுன்னு சொன்னேன்னு பதிலுக்கு சொல்றான் கதிர். ஆமாமா..ரோஷம் வர்ற மாதிரி திட்டுங்கன்னு சொல்றா முல்லை.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மறு ஒளிபரப்பாகி வருது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஹைலைட் முல்லை கதிர் இருவரின் ரொமான்ஸ் தான். புத்திசாலித்த தனமா முல்லை, கதிர் இருவரும் கல்யாணத்துக்கு பிறகு காதலில் விழும் எபிசோடில் ஆரம்பித்து சீரியலை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது விஜய் டிவி. முல்லை ஜீவா மாமாவுக்கு என்று வளர்ந்த மாமா பெண். ஆனால், ஜீவா மீனாவை காதலிக்க, கல்யாண மேடையில் ஜீவாவின் தம்பி கதிருக்கு மனைவியாகிறாள் முல்லை. இருவருக்கும் ஏற்கனேவே பொருந்தாது. எலியும் பூனையுமாக இருக்கும் இருவரும் காதலில் விழுந்த அன்றிலிருந்து ஒரே ரொமான்ஸ் காட்சிகள் தான்.
இந்த ரொமான்ஸுக்காகவே சீரியல் பார்த்த ரசிகர்களுக்கு இந்த லாக்டவுனில் மீண்டும் விருந்தளிப்பது போல பாண்டியன் ஸ்டோர்ஸ் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை மறு ஒளிபரப்பாகி வருது. இன்றைய எபிசோடில் புது வண்டியை ஓட்ட ஆசை வந்துருது முல்லைக்கு. கதிரை கற்றுத்தர சொல்லி வண்டியில் உட்கார்ந்து இருக்கா முல்லை. ம்ஹூம்... வண்டியை அசைக்க கூட முடியலை. ஏங்க.. ரோஷம் வர்ற மாதிரி திட்டுங்க.. அப்போத்தான் எனக்கு ரோஷம் வந்து நான் வண்டி ஓட்ட கத்துக்குவேன்னு முல்லை சொல்ல...
”உனக்கு அறிவில்லே... காலேஜுக்கு எல்லாம் போயி படிச்சு இருக்கேல்ல, 70 வயசு ஆயா வண்டி ஒட்டுது. நீயும் ஒரு ஆயா தானே, சாரி.. சாரி.. நீ வயசில சின்னவ தானே.. ஒரு வண்டியை ஓட்ட கத்துக்க முடியாதான்னு திட்டறான்”. ஏங்க இப்படி திட்டுறீகன்னு முல்லை கேட்க.. நீதானே ரோஷம் வர்ற மாதிரி திட்ட சொன்னேன்னு கதிர் சொல்றான்.. இல்லைங்க, இன்னும் ரோஷம் வரலை... திட்டுங்கன்னு சொல்றா முல்லை. இன்னும் ரோஷம் வரலையான்னு மலைச்சு நிற்கிறான் கதிர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”