Pandian Stores Serial: இயக்குநர் லிங்குசாமியின் ‘ஆனந்தம்’ திரைப்படத்தைப் போல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’.
பெண்கள் மட்டும் தான் சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி, இன்று குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் சீரியல் பார்க்கும் மன நிலைக்கு வந்து விட்டனர். அதிலும் விஜய் டி.வி-யின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முக்கிய பங்கு வகிக்கிறது. 4 சகோதரர்களில், மூவருக்கு திருமணமாகிறது. கடைசி சகோதரர் கண்ணா கல்லூரியில் படிக்கிறார். அத்தனை பேரும் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். இவர்களில் யாருக்காவது ஏதாச்சும் பிரச்னை ஏற்பட்டால், மொத்தக் குடும்பமும் பதறுகிறது. இதைப் பார்க்கும் ரசிகர்கள் அப்படியே நெகிழ்ந்துப் போகிறார்கள்.
அரண்மனை கிளி: கதையா சொன்ன கேரக்டர் நேர்லயே வந்துருச்சே!
முடிந்த எபிசோட்களில் கடைக்குட்டி தம்பி கண்ணன் செய்யாத தவறுக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு, அடி உதை என்று கஷ்டப்பட, குடும்பமே கண்ணனுக்காக துடித்தது. நான் வளர்த்த பையன் கண்ணன், இந்த மாதிரி தவறுகள் எதுவும் செய்திருக்க மாட்டான் என்று மூத்த அண்ணி தனம் சொல்லி சொல்லி அழுததில், சே அண்ணி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் எனத் தோன்றியது. தனத்துடன் சேர்ந்து மற்ற 2 மருமகள்களும் சாப்பிடாமல் கவலையில் இருந்தது எல்லாம், பார்வையாளர்களை பொறாமை கொள்ளச் செய்தது.
அக்கம் பக்கத்தினர் கண்ணனைப் பற்றி தவறாக பேசுவதும், பிறகு கண்ணன் குற்றவாளி இல்லை என விடுவித்ததும், மூன்று அண்ணிகளும் அந்த அக்கம் பக்கத்தினரை வறுத்தெடுத்தது எல்லாம் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் ரகம். பொதுவாக சீரியல் என்றாலே, வன்மம், குரோதம், பகை என்ற பாணி தான் அதிகம் இருக்கும். ஆனால் இத்தனையும் பாண்டியன் ஸ்டோர்ஸில் மிஸ்ஸிங். இயல்பாக ஒரு குடும்ப கதையாக இருப்பதால், பார்வையாளர்களின் மத்தியில் இது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.