Vijay TV Pandian Stores: 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் ஸ்மார்ட் போனில் போட்டோ பார்க்கத் தெரியலை கதிருக்கு. முல்லை போட்டோவை மட்டும் தனியா பார்க்கணும்னு கொள்ளை ஆசையில் இருக்கான் கதிர். பார்க்கத் தெரியாமல் திணற, இத பாருங்க.. போட்டோவை ஸூம் செய்து பார்க்கணும்னா இப்படி பார்க்கணும். அப்புறம் இப்படி நகர்த்திக்கிட்டே வந்தா அடுத்தடுத்த போட்டோவைப் பார்க்கலாம் என்று சொல்லித் தருகிறாள் முல்லை. ம்ம்.. ம்ம்.. அதெல்லாம் எனக்கு தெரியும் என்று அவளிடம் இருந்து போனை வாங்கி அவன் மறைத்து மறைத்து பார்க்கிறான்.
’மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்’: மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு புகார்
என்ன அப்படி மறைச்சு மறைச்சு பார்க்கறிய என்று முல்லை எட்டிப் பார்க்க, நீதான் பார்த்துட்டே இல்ல,நான் பார்க்கிறேன் இரு என்று சொல்றான் கதிர். இல்லைங்க எத்தனை தடவை பார்த்தாலும் நல்லாருக்கு என்று சொல்கிறாள் முல்லை. நான் பார்த்துக்கறேன்.. அப்புறம் நீ தனியா பாரு என்று சொல்லி அவன் கீழே வசதியாக உட்கார்ந்துகொண்டு போனை பார்க்கிறான், முல்லையைப் பார்க்கிறான். பிறகும் முல்லையைப் பார்க்கிறான், போனை பார்க்கிறான். என்னங்க அப்படி பார்க்கிறிய என்று முல்லை கேட்க.. இல்லை போட்டோவில் இருக்க மாதிரி நேரில் இருக்கியான்னு பார்த்தேன் என்று சொல்கிறான்.
என்னங்க.. போட்டோவிலும் நேரிலும் ஒரே மாதிரி இருக்கேனா என்று சிரிப்புடன் கேட்கிறாள் முல்லை. ம்ம் என்று சொல்லிவிட்டு மீண்டும் அவன் போனை பார்க்க, அழகா இருக்கேனான்னு கேட்கிறாள். அவனும் அழகா இருக்கேன்னு சொல்றான். அப்போதும் முல்லை மனம் சமாதானம் அடையவில்லை. போட்டோவிலா, நேரிலயாங்க என்று கேட்கிறாள். நேரில் இன்னும் அழகா இருக்கே என்று அவளுக்கு ஏற்ற மாதிரியே சொல்கிறான் கதிர். அப்பாடா என்று எதையோ சாதித்து விட்ட திருப்தி. அவன் முல்லையின் போட்டோவைப் பார்த்துவிட்டு போனை கொடுக்க. அவளும் போனை பார்த்துவிட்டு, இம்புட்டு நேரம் நம்ம போட்டோவைத்தான் ஸூம் பண்ணி பார்த்துகிட்டு இருந்து இருக்காகன்னு சொல்லி அளவில்லா ஆனந்தம் அடைகிறாள். என்ன என்று அவன் கேட்க, இல்லை இம்புட்டு நேரம் என் போட்டோவைத்தான் பார்த்துகிட்டு இருந்தியளா என்று கேட்க, கண்டுபிடிச்சுட்டியான்னு உலக மகா அதிசயத்தை கண்டு பிடிச்ச மாதிரி வியந்துக்கறான். பெரிய ஆளுதான் இவுக என்று முல்லை தனக்குத்தானே ரசித்து சிரிக்கிறாள்.
பேக்கிங் எக்ஸ்பெர்ட் ஆண்ட்ரியா, ஸ்டார் செஃப் டாப்ஸி: புகைப்படத் தொகுப்பு
பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மெகா சங்கமத்தில், முல்லையையும், கதிரையும் வைத்து போட்டோ ஷூட்னு வைக்கிறான் அகிலன். இந்த போட்டோக்கள் நேதான் இருவர் கையிலும் மாட்டிகிட்டு படாத பாடு படுது. இது மட்டுமா இன்னும் இருக்குது. போட்டோவை பெரிசு பண்ணி லேமினேஷன் செய்து படுக்கையறையில் மாட்டுவதும், அது கீழே விழப்போகும்போது இருவரும் சேர்ந்து பிடித்து ரொமான்ஸில் உருகுவதும் என்று நடக்கப் போகுது பாருங்களேன்....!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”