Tamil Serial News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டு வரும் இந்த சீரியலில், ஸ்டாலின், சுஜித்ரா, வெங்கட், ஹேமா, குமரன், சித்ரா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் குயின்ஸ் இவங்க தான்!
மூர்த்தியின் மூத்த தம்பி ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை. முதலில் இருவருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், போகப் போக புரிதல் உண்டாகிறது. தற்போது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள சீரியல் ஜோடிகளாக கதிரும், முல்லையும் மாறியிருக்கிறார்கள். இவர்கள் பெயரில் சமூகவலைதளத்தில் ஆர்மிக்களும் உருவாகியுள்ளன.
தற்போது மீனா கர்ப்பமாக இருக்கிறாள். அவளுக்கு வெகு விமர்சையாக வளைகாப்பும் நடத்தப்பட்டுள்ளது. இதில் விஜய் டிவி-யின் மற்ற நட்சத்திரங்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். இதன் ப்ரோமோவையும் விஜய் டிவி ஏற்கனவே வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், “அங்கிள் ஸ்நாக்ஸ் சாப்பிடுறீங்களா” என ஜீவாவிடம் கேட்கிறான் கண்ணன். ”அங்கிளா?” என ஜீவா கேட்க, “இனிமே அங்கிள் தான் அண்ணே. ஏண்ணே கல்யாணம் ஆகிட்டாலே ஆண்கள் எல்லாம் அங்கிள் தான் அண்ணே. இப்ப உனக்கு புள்ள வேற பொறக்க போகுது, நீ அங்கிள் தான் அண்ணே” என்கிறான் கண்ணன்.
”டேய் குழந்தை பொறக்கப் போகுதுன்னா, அண்ணன அங்கிள்ன்னு கூப்பிடுவியா” என குமரன் கேட்க, “ஏலேய் எனக்கு அம்புட்டு வயசெல்லாம் ஆகல டா, நானும் சின்ன பய தான் டா” என்கிறான் ஜீவா. “எணே போ.. ண்ணே...போ.. ண்ணே... இதெல்லாம் வேற எங்குட்டாவது போய் சொல்லு. வெளிய போனா இப்ப உன்ன ஒரு பொண்ணு கூட திரும்பி பாக்காது. இனிமே நீ அயர்ன் பண்ணியெல்லாம் சட்டை போட வேணாம். அப்படியே சும்மா பக்கிரி மாரியே போலாம். இல்லைன்னா நம்ம பெரியண்ணன் மாதிரி ரப்பர் செருப்பு போட்டுக்கிட்டு, வெறும் வேஷ்டியும், ப்ளைன் சட்டையும் போட்டுட்டு கிளம்பு” என கிண்டல் செய்கிறான் கண்ணன்.
ஆ.ராசா, பொன்முடிக்கு திமுக.வில் புதிய பதவி – பொதுக்குழுவில் அறிவிப்பு
”அப்படியே அயர்ன் பண்ணி சட்டைய போட்டா மட்டும், அப்படியே வரிசைலயா வந்து நிக்கிறாங்க? அட போடா நீ வேற” என்கிறான் ஜீவா. “ஓ அப்போ இப்போவே பாக்குறது இல்லயா? ஸோ சேட் ண்ணே...” என்கிறான் கண்ணன்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”