நிகழ்ச்சியின் நடுவே உடைந்து அழுத பிரியங்கா : வைரலாகும் வீடியோ

கணவர் இல்லாம, கஷ்டப்பட்டு ஒரு பெண் குழந்தையை வளர்த்து படிக்க வச்சதுக்கு நீங்க பட்ட கஷ்டத்தையெல்லாம் கடவுள் பாத்திருக்காரு.

By: Updated: January 3, 2020, 11:47:22 AM

Priyanka Deshpande : விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இவற்றில் முதன்மையானது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதன் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. தன்னைத் தானே கிண்டல் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பது, மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்து சமாளிப்பது போன்ற விஷயங்களால் பிரியங்காவுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள்.

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை !

தர்பார் தடை வழக்கு: லைகா நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அவகாசம்

இவர் தற்போது ’தி வால்’ என்ற நிகழ்ச்சியை மா.கா.பா.ஆனந்த் உடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார். இதன் சமீபத்திய எபிசோடில் போட்டியாளராக ஒரு பெண் பங்கேற்றார். அவர் 33 வருடமாக வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை குறிப்பிட்டு பேசினார். அதோடு அந்த நிகழ்ச்சியில் 59 லட்ச ரூபாயையும் அவர் வென்றார். இதனால் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டார் பிரியங்கா.

”கணவர் இல்லாம, கஷ்டப்பட்டு ஒரு பெண் குழந்தையை வளர்த்து படிக்க வச்சதுக்கு நீங்க பட்ட கஷ்டத்தையெல்லாம் கடவுள் பாத்திருக்காரு. அது தான் உங்களுக்கு இவ்ளோ பெரிய தொகை கிடைக்க காரணமா இருந்திருக்கு” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே பேசினார்.

DARBAR Promo : தர்பார் படத்தின் முதல் ப்ரோமோ வெளியீடு

இந்த எபிசோடை வாழ்நாளில் மறக்க முடியாது என்றுக் கூறி அதனை ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார் பிரியங்கா.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vijay tv priyanka crying video the wall show

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X