Advertisment

தர்பார் தடை வழக்கு: நீதிமன்றத்தில் லைகா இன்று பதில்!

மனுவை விசாரித்த விடுமுறைகால நீதிமன்றம், ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LYCA productions, darbar release, madras high court

LYCA productions, darbar release, madras high court

நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் லைகா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை ஏற்று லைகா நிறுவனம் இன்று பதில் தாக்கல் செய்கிறது.

Advertisment

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ளது.

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !

தர்பார் தடை வழக்கு: லைகா நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அவகாசம்

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திடம் இருந்து, மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய்க்கு பெற்றதாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் படத் தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைகா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை தங்களுக்கு லைகா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த விடுமுறைகால நீதிமன்றம், ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

முதல் ஃபோட்டோ ஷூட்டா இது? ரசிகர்களை மயக்கும் லாஸ்லியா!

இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாளை பதில் மனு தாக்கல் செய்வதாக கூறி லைகா நிறுவனம் தரப்பில் நேற்று அவகாசம் கோரப்பட்டது.

Rajinikanth Lyca Productions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment