செந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்?

மாயனுக்கு உண்மையிலேயே அருள் வர, அனைவருக்கும் வாக்கு கூறி, ஆசீர்வதிக்கிறான்.

மாயனுக்கு உண்மையிலேயே அருள் வர, அனைவருக்கும் வாக்கு கூறி, ஆசீர்வதிக்கிறான்.

author-image
WebDesk
New Update
Tamil Serial News, Vijay TV Senthoora Poove, Naam Iruvar Namakku Iruvar

செந்தூரப் பூவே சீரியல்

Tamil Serial News:  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ மற்றும் ‘செந்தூரப்பூவே’ இரண்டு சீரியல்களும் இந்த வாரம், ஒன்றாக இணைந்து மக சங்கமமாக ஒளிபரப்பாகின்றன.

Advertisment

2021 தேர்தலில் என் பங்கு..! குஷ்பூ Exclusive

துரைசிங்கம் வீட்டிற்கு மாயன் குடும்பத்துடன் வருகிறான். அப்போது ரோஜா, மகா இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் எனத் தெரிய வருகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க, கர்ப்பமாக இருக்கும் ரோஜா வாந்தி எடுக்கிறார். இதனால் பயந்துப் போன மகாவோ, உனக்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன், வா டாக்டரிடம் போகலாம் இல்லன்னா அத்தையிடம் சொல்லலாம் என்கிறார். அழத் தொடங்கும் ரோஜா, தனது கதையை மகாவிடம் கூறுகிறாள். மகா அவளுக்கு ஆதரவாக இருக்கிறாள்.

இதற்கிடையே, ரோஜாவை பழி வாங்க வேண்டும் என விறகில் பட்டாசை வைத்துவிடுகிறார்கள் ஐஸ்வர்யாவும், அவளது அண்ணனும். அதை எப்படியோ கண்டுபிடித்த மாயன் அதிலிருந்து ரோஜாவை கப்பாற்றிவிடுகிறான். விளையாட்டாக சொன்ன விஷயம் நிஜமாகிறது. மாயனுக்கு உண்மையிலேயே அருள் வர, அனைவருக்கும் வாக்கு கூறி, ஆசீர்வதிக்கிறான்.

அனைவருக்கும் அருள் கூறிய அய்யனார், ரோஜாவுக்கு மட்டும் வாக்குக் கூறாமல் போய் விட, இதனால் மனமுடைந்த ரோஜா வருத்தத்தில் அழுது கொண்டிருக்கிறாள். இதைப் பார்த்த துரைசிங்கம் அவளுக்கு ஆறுதலாக பேசி சிரிக்க வைக்கிறார்.

Advertisment
Advertisements

வீட்டிற்கு கிளம்பிய மாயன் குடும்பத்தினரை மழை காரணமாக தீபாவளி முடியும் வரை தங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என துரைசிங்கம் கூற, அனைவரும் அங்கேயே தங்குகிறார்கள். தீபாவளி பண்டிகைக்காக மாயனும், துரைசிங்கமும் அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்து தருகிறார்கள்.

பாலாவின் அலட்சியம்: கடினமான டாஸ்க்கில் போட்டியாளர்கள்!

இதையடுத்து புதிய ஜோடிகள் மாயன்-மகா, துரைசிங்கம்-ரோஜா ஆகியோருக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ரோஜாவும், துரைசிங்கமும் ஒன்று சேரக் கூடாது என அவர்களை பிரிப்பதற்கு ஐஸ்வர்யா ஒரு பக்கம் பிளான் போடுகிறாள். மறு பக்கம் கயலும், கனியும் பட்டாசுகள் வெடித்து மகிழ்கிறார்கள். எல்லாவற்றிலும் பிரச்னை செய்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா இதிலும் பெரிய பிரச்னை செய்வாள் என்றே தெரிகிறது. அதிலிருந்து துரை சிங்கம் - ரோஜா எப்படி தப்பிப்பார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: