படிக்காத ஒருவன் லண்டனில் எம்பிஏ படிச்சேன்னு பொய் சொல்றான். ஒரு சப் கலெக்டர் இந்திராவால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் சொன்ன பொய்யை நம்பி அவனை காதலிக்க ஆரம்பிச்சுட்டா. அதோட, அவங்க அம்மா அந்த ஊரில் பெரிய தலை. அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு கூட சரியாய் சொல்ல முடியலை. காளி அம்மாள் செய்யும் செயல் அத்தனையும் அடாவடியாகத்தான் இருக்கிறது. காளி அம்மா மகன்தான் சக்தின்னு தெரியாமலே இந்திரா அவனை காதலிக்கிறா.
காளி அம்மாவின் அடாவடி செயல்களை தட்டிக் கேட்பேன் என்று புறப்படும் இந்திரா, கடைசியில் சக்தியை கல்யாணம் செய்துக்கொள்ளும்போது அவன் காளி அம்மாள் மகன் என்று தெரியுது. தாலி கழுத்தில் ஏறியாச்சு, இனி என்ன செய்ய முடியும்? கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு இந்திரா மாமியார் செய்யும் அத்தனை கொடுமைகளையும் தாங்கிகிட்டு சப் கலெக்டரா வாழ்கிறாள். காளி அம்மாள் இந்திராவுக்கு மட்டும் இல்லை, அவளோட அம்மா அப்பாவுக்கும் கஷ்டங்கள் தர்றாங்க. அதுக்கும் பொறுத்து பொறுத்து வாழ்க்கிறாள் இந்திரா.
காளி அம்மாவாக நடிகை மவுனிகா நடிக்கறாங்க. நடிப்பில் நல்ல அசத்தல். கெட்டப் வித்தியாசமாக இருக்கிறது. அவங்க கேரக்டருக்குத் தகுந்த மாதிரி ரொம்ப நல்லாவே நடிக்கறாங்க. காளி அம்மா தனது மருமகள் இந்திராவுக்கு ஊர் நடுவுல உட்கார வச்சு மொட்டையடிச்சு பழி தீர்த்துக்க நினைக்கிறாங்க. இப்போதுதான் முதன் முறையா ஒரு சப் கலெக்டருக்கு நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்க மேலதிகாரிகள் வர்றாங்க. அப்போதும் இந்த சக்தி பய வந்து, இங்கே நடக்கற விஷயத்துக்கும் என் அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான்தான் கலெக்டர் அம்மாவுக்கு இதை செய்ய சொன்னேன்னு சொல்லி அவன் போலீஸ்கூட போறான்.
ஏற்கனேவே புருஷன் தன்னை ஏமாத்திட்டான்னு வெறுப்பில் இருக்கும் இந்திராவுக்கு இன்னும் வெறுப்பு அதிகமாகி, வெறுப்போடு அவனை பார்க்கிறாள். காளி அம்மா மட்டும் மகனை பெருமிதமாக பார்க்கறாங்க. ஒரு சப் கலெக்டருக்கே அநியாயம் நடக்குதுன்னா சாதாரண பெண் என்ன செய்வாள் என்கிற கேள்வி எழாமல் இல்லை. விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"