scorecardresearch

‘ஃபர்ஸ்ட் நைட் யார் வீட்டுல என்பதே பிரச்னை; அப்புறம் ஹோட்டலில் வைத்தோம்’: சம்யுக்தா- விஷ்ணுகாந்த் உறவு கசந்த பின்னணி

முதலிரவு யார் வீட்டில் வைப்பது என்பதே பெரிய பிரச்சனையாக ஆனது; சீரியல் நடிகர்கள் சம்யுக்தா – விஷ்ணுகாந்த் பிரிந்த பின்னணி

samyuktha and vishnukanth
சீரியல் நடிகர்கள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த்

சீரியல் நடிகர்கள் சம்யுக்தா – விஷ்ணுகாந்த் திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்துள்ள நிலையில், அவர்களுக்கு இடையிலான பிரச்சனைக்கான பின்னணி வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்தவர் சம்யுக்தா. அவர் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்த விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இதையும் படியுங்கள்: மகாலட்சுமியுடன் என்ன பிரச்னை? ரவீந்தர் சோகப் பதிவு

இந்தநிலையில், திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் தற்போது பிரிந்துவிட்டனர். இவர்கள் இருவரின் பஞ்சாயத்துதான் சோஷியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

திருமண உறவில் இருந்து பிரிந்தது குறித்து குறித்து இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய சம்யுக்தா, 24 மணி நேரமும் அவருக்கு அது வேண்டும். சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு என்று எல்லாவற்றுக்கும் தனித்தனியாக நேரம் இருக்கிறது ஆனால், 24 மணிநேரமும் அவருக்கு அதே நினைப்பு தான். சின்ன பெண் என்று கூட பார்க்கவில்லை, என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், நடிகை ஷகிலாவுக்கு பேட்டி அளித்த விஷ்ணுகாந்த், ”திருமணத்திற்கு முன்பு அப்பா என்னுடன் இல்லை, அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்பதால், திருமணத்திற்கு வரமாட்டார் என்று சம்யுக்தா கூறினார். ஆனால், அவர் திருமணத்திற்கு வந்தார். அப்போது மகளின் திருமணத்திற்காக வந்து இருக்கிறார் என்று நினைத்தேன். கல்யாணம் எங்கள் முறைப்படியே பண்ணலாம் என்று சொன்னவர்கள் மாற்றி மாற்றி பேசினார்கள். அதில் இருந்த பிரச்சனை தொடங்கியது. அப்போதே நான் டென்ஷனாகிவிட்டேன், யாரிடமும் பேசாமல் இருந்தேன். ஆனால், நான் சம்யுக்தாவை ரொம்பவும் நம்பினேன்.

முதலிரவு யார் வீட்டில் வைப்பது என்பதே பெரிய பிரச்சனையாக ஆனது. இதனால், யாருக்கும் பிரச்சனை வராமல் ஹோட்டலில் வைத்தோம். அப்போது காலையில் எழுந்ததுமே, ஒரு பிரண்ட் கூட பேசுனாங்க, ஏற்கனவே அந்த பெண்ணால எங்களுக்குள் பிரச்சனை, அதுவும் இல்லாமல் அந்த பெண், ஆண் போல நடந்துகொள்வாள் என்று சம்யுக்தா சொல்லி இருக்கிறாள். இதனால்தான் அந்த பெண்கூட பேசாதே என்றேன். ஆனால், சம்யுக்தா என்னைவிட அந்த பெண் தோழிதான் வேண்டும் என்கிறார்” என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv serial actors samyuktha and vishnukanth separation reason

Best of Express