Advertisment
Presenting Partner
Desktop GIF

இன்ஸ்டாவில் ரொமான்ஸ் பதிவு... விஜய் டி.வி டான்ஸர்- குக் வித் கோமாளி நடிகை இடையே காதல்?

விஜய் டிவி டான்ஸ்ர் உடன் மௌனராகம் நடிகை காதல்? இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் கேள்வி

author-image
WebDesk
New Update
Raveena

விஜய் டிவி சீரியல் நடிகை ரவீனா

விஜய் டிவி சீரியல் நடிகை ரவீனா டான்ஸர் மணியுடன் எடுத்துக் கொண்ட ரொமான்ஸ் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி பெரிய வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று மௌன ராகம். முதல் பாகம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் சில புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டது. இதில் ரவீனா தாஹா சக்தியாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். தற்போது ரவீனா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று வருகிறார். மேலும், நிறைய நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தனது டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு சமூக வலைதளப் பக்கங்களிலும் அடிக்கடி டான்ஸ் உள்ளிட்ட ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: அப்பா- அம்மா முன்னால இப்படி அந்தரங்கம் பேசலாமா? சம்யுக்தா மீது சன் டி.வி சீரியல் நடிகை காட்டம்

இதனிடையே ரவீனா, டான்ஸர் மணிச்சந்திராவுடன் அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து பதிவிட்ட வண்ணம் உள்ளார். இந்த நிலையில் மணியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி ரவீனா, அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் மணிக்கு வாழ்த்துச் சொல்லி, செல்லோ என்ற ஹேஷ்டேக்கையும், ஹார்ட்டீன் சிம்பலையும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Raveena Daha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment