New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/10-21.jpg)
vijay tv serial barathi kannamma serial
ஒரு கையில் திருட்டு மாங்காய், இன்னொரு கையில் மல்லி பூ என்று பாரதி அசத்த, அவன் மாங்காய் திருடினான்
vijay tv serial barathi kannamma serial
vijay tv serial barathi kannamma serial : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல்..பாரதி காதலியே
: கண்ணம்மா..கண்ணம்மா என்கிற பாடலுடன் ஆரம்பிக்கும்போதே ஏதோ ஒன்று இருக்கிறது என்று சீரியலை பார்க்கத் தூண்டுகிறது. கருப்பு நிறத்தில் இருக்கும் கண்ணம்மாவை டாக்டர் பாரதி காதலித்து கல்யாணம் செய்துக்கறான். இவன் அம்மா சவுந்தர்யாவுக்கு கறுப்புன்னாலே ஆகாது.
அதாவது மனிதர்கள் நிறத்திலும் கருப்பு மீது அவங்களுக்கு சுத்தமா வெறுப்புத்தான். சொல்லணுமா, கண்ணம்மாவைக் கண்டாலே பிடிக்கலை. கண்ணம்மாவின் சித்தி பெண் அஞ்சலி மிஸ் மெட்ராஸ்.. அழகில் மயங்கி அவளை ரெண்டாவது பையன் அகிலனுக்கு கல்யாணம் செய்து வச்சு தலைமேல் தூக்கி கொண்டாடி வரும்போதுதான் கண்ணம்மா கர்ப்பமாகி விடுகிறாள்.
இப்போ, கண்ணம்மாவை விருப்பத்தை மறந்து தூக்கி வச்சு கொண்டாடுகிறார். இங்கே நிற்காதே.. அப்படி நடக்காதே..மாடிப்படி ஏறக்கூடாதுன்னு பார்த்து பார்த்து கவனிக்கறாங்க. இந்த பொண்ணுங்க அந்த நேரம் பார்த்துதான் ஸ்டூல் போட்டு பீரோ மேலே இருக்கறதை எடுக்கறது...உயரத்தில் இருக்கும் மளிகை சாமான் டப்பாவை எடுக்கறதுன்னு ராசாவின் மனசிலே மீனா கணக்கா துடுக்குத்தனம் பண்ணுவாங்க. அப்படி கண்ணம்மாவும் செய்து அத்தைகிட்டே திட்டு வாங்குகிறாள்.
இது ஒரு புறம் இருக்கட்டும்...மாமா என்னவோ டேஸ்ட் வேணும்போல இருக்கு மாமா..என்னன்னு சொல்லத் தெரியலைன்னு கண்ணம்மா சொல்ல, என்ன என்று கேட்டும் அவளுக்கு சொல்லத் தெரியலை. என்னவா இருக்கும்னு யோசிச்சவன் பூக்கடை வச்சு இருக்கும் பாட்டிகிட்டே சந்தேகத்தை கேட்க, பிள்ளைத்தாச்சி பொண்ணு மாங்காயதான் கேட்பாங்கன்னு பாட்டி சொல்லிடறாங்க.
பாரதிக்கு எங்கே தேடியும் மாங்காய் கிடைக்கலை... ஒரு வீட்டில் இருக்கும் மரத்தில் மாங்காய் காய்ச்சு தொங்க, சுவரேறி குதிச்சு மாங்காய் திருடிகிட்டு வந்து கண்ணம்மாவிடம் கொடுத்து அவள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிக்கிறான். ஒரு கையில் திருட்டு மாங்காய், இன்னொரு கையில் மல்லி பூ என்று பாரதி அசத்த, அவன் மாங்காய் திருடினான் என்பதை சவுந்தர்யா அம்மா சொல்லி சொல்லி ரசிச்சு சிரிக்கறாங்க.
மகளா? மருமகனா? வனிதா பிரச்சனையில் மொத்த குடும்பமும் ஆகாஷ் பக்கம் தான்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.