Vijay TV Serials, Thenmozhi BA Serial: விஜய் டிவியின் தேன்மொழி பி.ஏ, ஊராட்சி மன்றத் தலைவர் சீரியல், மூலம் தொகுப்பாளினியாக இருந்த ஜாக்குலின், சீரியல் ஹீரோயினாகியிருக்கிறார். விஜய் டிவி-யின் பிரபல நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ஜாக்குலின். தற்போது தேன்மொழி பி.ஏ சீரியலில் தேன்மொழியாக நடித்துள்ளார். கணவன் அருளை ஹீரோ சார் என்று கூப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தேன்மொழி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பதால், அவளை மகன் அருளுக்கு பிடிக்காமல் கல்யாணம் செய்து வைக்கிறார் அவனது தந்தை. அவள் காந்திநகர் காரி என்று வீட்டுக்குள் முதலில் அனுமதிக்க மறுக்கிறார் அவனது அம்மா.
திவ்யா, சக்தி, ரோஜா: மறக்க முடியாத மணிரத்னம் ஹீரோயின்ஸ்!
இருந்தாலும், தேன்மொழிக்கு அருள் என்றால் கொள்ளை பிரியம். திருமணத்துக்கு முன்பிருந்தே அவன் மேல் ஒருதலை காதல் இருந்தது. திருமணத்துக்கு பிறகு அந்த காதல் இன்னும் அதிகமாகிறது. தேன்மொழியை புரிந்துக் கொண்ட, அருளின் பாட்டி அவளுக்கு பக்க பலமாக இருக்கிறார். அவ்வப்போது அவளுக்கு ஐடியா தந்து அசத்துகிறார். இருப்பினும் மருமகளை பழி வாங்க வேண்டும் என்று துடிக்கும், அருளின் அம்மா, கிடைக்கிற கேப்பில் எல்லாம், கிடா வெட்டுகிறார்.
இந்நிலையில் தேன்மொழியின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு பிளான் போடுகிறார் அருளின் அம்மா. ஆனால் அதற்கு அருளின் அக்கா பலிகடா ஆகிறாள். அவளை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்கு வரும் அக்கா கணவரிடம், அவளுக்கு அபார்ஷன் ஆகி விட்டது, என்கிறான் அருள். வாயடைத்துப் போகிறார் அருளின் அம்மா. ‘தேன்மொழி வயித்துல வளர்ற கருவும் நம்ம வீட்டு வாரிசு தான. அத போய் கொல்ல நெனச்ச பாவத்துக்கு, இப்போ என்னாச்சு பாத்தியா?’ என நொந்துக் கொள்கிறார்.
அடுத்த டும் டும் டும்… தொழிலதிபருடன் காஜல் ரகசிய நிச்சயதார்த்தம்?
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கருவை கலைக்க மருந்து வாங்கியவரின் வீட்டுக்கு சென்று, ‘நான் உங்கக் கிட்ட மருந்து வாங்குன விஷயத்த யார் வந்து கேட்டாலும் சொல்லக் கூடாது’ என்கிறார் அருளின் அம்மா. இதை வெளியே நின்று அவர் மகள் கேட்டு விடுகிறாள். மகள் கேட்டு விட்டாள் என்பதை புரிந்துக் கொண்ட அவருக்கு, அதிர்ச்சி தாங்கவில்லை. மகள் காலில் விழுந்து, ‘என்னை மன்னிச்சிடு’ என்கிறார். ’நீ எனக்கு செஞ்சது பச்ச துரோகம், இனி என் மூஞ்சில முழிக்காத’ என வெளியேறுகிறாள். கதறி அழுகிறார் அருளின் அம்மா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”