Vijay TV, Sundari Neeyum Sundaran Naanum: விஜய் டிவியின் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியலில் நடிகை லதா, பாட்டியா நடிச்சு இருக்காங்க. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலும் லாக்டவுனில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. வேலுவின் செல்ல பாட்டி லதா. வேலு அரசியல்வாதி. அரசியல் பிடிக்காதவங்க பாட்டி. இவங்க ஆசையா ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கறாங்க. அந்த பெண் தான் தமிழ்செல்வி. ஏழை பிள்ளைகளுக்கு பள்ளி நடத்தும் குடும்பத்தில் பிறந்து, அதே பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கும் தமிழ்ச்செல்விக்கும், வேலுவுக்கும் எப்போதும் ஆகாது. என்றாலும், பாட்டி கல்யாணம் செய்து வச்சுடறாங்க.
பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மாரடைப்பால் மரணம்
கல்யாணம் ஆன பின்னரும் வேலுவும், தமிழும் எலியும் பூனையும் மாதிரி இருக்க, அப்போது தான் வேலுவிடம் வம்பு இழுக்கிறாள் தமிழ். கல்யாணத்துக்கு பிறகும் உன்னை வேலுன்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்னு அம்மா திட்டறாங்க. அதனால உன்னை எப்படி கூப்பிடலாம்னு அவன்கிட்டே யோசனை கேட்க, ஏய்.. போடீ.. நீ ஒன்னும் சொல்லி என்னை கூப்பிட வேணாம் என்று வேலு கடுப்பில் சொல்கிறான். அதெப்படி வேலுன்னு கூப்பிட முடியும். பாட்டியும் திட்டுவாங்க. அதனால் உன்னை எதாவது சொல்லி கூப்பிட்டே ஆகணும் என்று களத்தில் இறங்குகிறாள் தமிழ்.
’பென்குயின்’ விமர்சனம்: ‘ராட்சசன்’ சாயலில் மற்றுமொரு படம்
மச்சான் என அவள் கூப்பிட, மச்சான்னு கூப்பிட்டே, கன்னத்துல ஒண்ணு வச்சான் என்று வேலு கையை ஓங்குகிறான். இல்லை... இல்லை இதுவும் அத்தான் மாதிரி படு லோக்கலா இருக்கு என்று சொல்லி வேற எப்படி கூப்பிடலாம். பேபி என்று கூப்பிட, ஏய் என கத்துகிறான் வேலு. இல்லை.. இல்லை... இவ்ளோ பெருசா வளர்ந்த உன்னை பேபின்னு கூப்பிட்டா நல்லா இல்லை.. புஜ்ஜி என்று சொல்லி கூப்பிட்டு விட்டு... நாய் குட்டியை கூப்பிடற மாதிரி இருக்குன்னு சொல்லிக்கறா. என்னடா இவ கூட போராட்டம், ஒன்னும் சொல்ல முடியலே என்று தலையில் கை வைத்துக்கொள்கிறான் வேலு. ஆங். கண்டு பிடிச்சுட்டேன்.. மாமா. ம்ம்ம்... இது தான் சின்னதா, லேட்டஸ்டா இருக்குன்னு சொல்ல அடிக்க ஓடுகிறான் வேலு.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”