New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Meena.jpg)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடிகை மீனாவிடம் முத்தம் கேட்ட போட்டியாளர்; வைரல் ப்ரோமோ வீடியோ
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடிகை மீனாவிடம் முத்தம் கேட்ட போட்டியாளர்; வைரல் ப்ரோமோ வீடியோ
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை மீனாவிடம் போட்டியாளர் ஒருவர் திடீரென முத்தம் கேட்க, அதற்கு மீனாவும் முத்தம் வழங்கிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என இரண்டு வடிவங்களிலும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் சீனியர் சீசன் 9 முடிவடைந்த நிலையில், தற்போது ஜூனியர் சீசன் 9 ஒளிபரப்பாகி வருகிறது.
இதையும் படியுங்கள்: சன் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்டு; ரசிகர்கள் அதிர்ச்சி
மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பாடகி சித்ரா, இசையமைப்பாளர் தமன், பாடகர் அந்தோணி தாசன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் டூயட் சுற்று நடைபெற்றது. இதற்கான ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் நடிகை மீனா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார். ஏற்கனவே சீனியர் சீசனில் கலந்துக் கொண்டவர், தற்போது ஜூனியர் சீசனிலும் கலந்துக் கொண்டுள்ளார். மீனா மட்டுமல்லாமல், பாடகர் மனோ, ஸ்டீபன் சகாரியா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் போட்டியாளரான ஒரு சிறுமி, ரஜினி – மீனா நடித்த முத்து படத்தின் டயலாக்கான இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரும் டயலாக்கை கூறி நடிகை மீனாவிடம் முத்தம் கேட்டார். உடனடியாக நடிகை மீனாவும் அந்தச் சிறுமியை கட்டி அணைத்து முத்தம் தருகிறார். இவ்வாறு அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.