Vijay TV's engitte mothaathe : விஜய் டிவியின் என்கிட்டே மோதாதே ரியாலிட்டி ஷோவை, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியின் எந்த ரியாலிட்டி ஷோவானாலும் சரி, காமெடிக்குத்தான் முதலிடம். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள், டைட்டில் வின்னர் இவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, அவ்வப்போது காமெடி வழங்குவது என்பதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகிறது விஜய் டிவி. இதில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் டிடி, பிரியங்கா, ஜாக்குலின் மூவருக்குமே காமெடி சென்ஸ் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.
என்கிட்ட மோதாதே சீசன் 2 தற்போது நடந்துக்கொண்டு இருக்கும் நிலையில், லாக்டவுன் நேரத்தில் இந்த ஷோ மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து கொஞ்ச நேரம் காமெடியாகவே சென்று கொண்டு இருக்கும். அதன் படி காமெடிக்கு என்று வந்திருந்தனர் தீனா, புகழ் இருவரும். அப்போது புகழை டிடி சகட்டு மேனிக்கு கலாய்த்தார். யாரு தீனா இது..உங்க சாரோட டச்சப்பா? டச்சப்பே யோகிபாபு ரேஞ்சுக்கு இருக்காரே..அப்போ ஈவண்ட் நடத்த வரும் சார் எந்த ரேஞ்சில் இருப்பார்னு கலாய்ச்சார்.
புகழ் காமெடி செய்யவில்லை என்று விளையாட்டாக தீனாவிடம், எதுக்கு இவரை அழைச்சுட்டு வந்தே தீனா... என்னவாவது காமெடி செய்தாரா? உனக்கு கடைசியா கூட ஒரு சான்ஸ் கொடுத்தேன் தீனா.. இந்த ஷோவை பத்தி நீ என்ன நினைச்சே தீனா...உன்னையும் சேர்த்து புதை குழிக்குள்ள தள்ளி இருக்காரு... இவர் ஒரு பெர்ஃபார்மரா தீனா...இவரை வெளியில அனுப்புன்னு டிடி சொல்ல, புகழை அடிக்கறேன்னு டிடி கன்னத்தில் தீனா விட்டார் பொளேர் என்று ஒரு அறை.... பிளான் பண்ணாம பண்ணி இருப்பாய்ங்களோ...எஸ்கேப் டா சாமி!
தவ வாழ்வு கொண்ட காந்தாரி கண் திறக்கும் தருணம்...!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil