scorecardresearch

விஜய லட்சுமிக்கு ஓடோடி உதவி செய்த கஸ்தூரி, காயத்ரி!

கடந்த 4 மாதமாக சீமானும், சீமான் கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மன அழுத்தத்தில் உள்ளேன்.

Vijayalakshmi press meet
விஜயலட்சுமி press meet

Vijayalakshmi :  ஃப்ரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், மீசையை முறுக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு நேற்று தற்கொலைக்கு முயன்றார்.

’எனக்கிருந்த குறை சரியாச்சுங்கறதுக்கு அது தான் ஆதாரம்’: பாரதி மாஸ்!

முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோவில், “இது எனது கடைசி வீடியோ. கடந்த 4 மாதமாக சீமானும், சீமான் கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மன அழுத்தத்தில் உள்ளேன். ரொம்ப மல்லுக்கட்டிட்டு வாழணும்னு முயற்சித்தது எனது அம்மா, அக்காவுக்காகத்தான். நேற்று முன்தினம் ஹரிநாடார் பேசி ரொம்ப அசிங்கப்படுத்தியது, மீடியாவில் என்னை அசிங்கப் படுத்தியது போதும் என ஆகி விட்டது. இதுக்குமேல் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

எனது குடும்பத்தை விட்டுச் செல்கிறேன். சீமானை விடாதீர்கள். அவர், முன்ஜாமீன் எடுக்கவோ, தப்பிக்கவோ விடக்கூடாது. நான் அதிக நாள் வாழ நினைத்தேன். ஆனால், வாழ விடவில்லை. சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் விஜயலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்தேன். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கினேன். அவர்கள் மூன்று உடைந்த பெண்கள். நான் உஷாவுடன் பணிபுரிந்தேன், அவருடைய திருமணத்தில் கலந்து கொண்டேன். ஆனால் நேற்று அவரை அடையாளம் காண முடியவில்லை” என நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்த அவர், ”விஜியின் மருத்துவ பராமரிப்புக்கான ஏற்பாடுகளை நேற்று செய்த காயத்ரி ரகுராமுக்கு மனமார்ந்த நன்றி. சரியான நேரத்தில் செய்த உதவிக்கு பின்னால் அரசியல் உந்துதல்கள் இருப்பதாக நான் நம்பவில்லை. முதல் விஷயம் விஜயலட்சுமியின் உயிரைக் காப்பாற்றுவது தான்” என்று தெரிவித்திருக்கிறார்.

வாடிக்கையாளர்களுக்கு ”சானிட்டைசர்” தரும் ரோபோ பொம்மை…

”விஜயலட்சுமி இப்போது நன்றாக இருக்கிறார். சோஷியல் மீடியா துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்களால் அவர் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளார். ஒற்றையாக போராடும் பெண்ணாக அவர் நிறைய எதிர்கொண்டார். இணைய கொடுமைப்படுத்துதலை நிறுத்துங்கள். உங்களை கைக்கூப்பி கேட்டுக் கொள்கிறேன்” என நடிகை காயத்ரி ரகுராமும் ட்வீட் செய்துள்ளார்.

விஜயலட்சுமியின் தற்கொலை முயற்சியை அறிந்த திரைத்துறையினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijayalakshmi suicide attempt kasthuri gayathri raguram help