/tamil-ie/media/media_files/uploads/2020/01/Vishnu-Vishal-Jwala-Gutta.jpg)
Vishnu Vishal Jwala Gutta
Vishnu Vishal's New Year Celebration with Jwala Gutta : இயக்குநர் பிரபு சாலமன் இயக்கி வரும் 'காடன்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஷ்ணுவுக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. அதனால் படங்களில் நடிக்க முடியாமல், சிகிச்சை பெற்று வந்தார் விஷ்ணு. இதன் காரணமாக 2019-ல் அவருக்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !
முதல் ஃபோட்டோ ஷூட்டா இது? ரசிகர்களை மயக்கும் லாஸ்லியா!
கடின உழைப்பாளியான விஷ்ணு, தனது உடலை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வர, நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். இப்போது 'எஃப்.ஐ.ஆர்' மற்றும் 'ஜகஜால கில்லாடி' ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் இயக்குநர் செல்ல அய்யாவுடன் ஒரு ஸ்போர்ட்ஸ் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
My baby ❤️❤️ happy new year ❤️❤️ @TheVishnuVishalpic.twitter.com/gxSRyVOHVb
— Gutta Jwala (@Guttajwala) December 31, 2019
இதற்கிடையே விஷ்ணு விஷால் தனது மனைவியை 2018-ல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் இருக்கிறார். இந்நிலையில், அவர் பேட்மிண்டன் நட்சத்திரமான ஜ்வாலா குட்டாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக வதந்திகள் வெளியாகின. ஆனால், இதை இருவருமே மறுக்கவில்லை. இதற்கிடையே புத்தாண்டு தினத்தன்று ஜ்வாலா விஷ்ணுவுடன் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படத்தையும், அவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தங்களது ரிலேஷன் ஷிப்பை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள் இந்த புது ஜோடி.
Happy 2020 ❤️❤️...@TheVishnuVishalpic.twitter.com/Fkagebro5j
— Gutta Jwala (@Guttajwala) December 31, 2019
தவிர, 2005-ல் சக பேட்மிண்டன் பிளேயர் சேத்தன் ஆனந்தை திருமணம் செய்துக் கொண்ட ஜ்வாலா, 2010-ல் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.