scorecardresearch

Vishwaroopam 2: விஸ்வரூபம் 2 ரிலீஸ் ஆகாத சில மாவட்டங்கள்!

Vishwaroopam 2 Movie Live Updates: விஸ்வரூபம் 2 படம் இன்று ரிலீஸ் ஆனது. அரசியல்வாதி கமல்ஹாசனின் முதல் சினிமா இது!

Vishwaroopam 2 movie release
விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியானது

Vishwaroopam II Tamil Movie: கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படம் இன்று வெளியானது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜா குமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு நடித்து வெளியாகும் முதல் படம் என்பதால் விஸ்வரூபம் 2-ன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அண்மையில் வெளியாகிய ரஜினிகாந்தின் காலா படத்துடன் விஸ்வரூபம் 2-வை ஒப்பிட்டும் விமர்சனங்களை எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தில் வரும் பாடலை போலவே படமும் ‘தடைகளை வென்று’ வெளியாகியுள்ளது. முன்னதாக விஸ்வரூபம் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திற்கும் பிரச்சனைகள் எழுந்தது. இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்குகளும் தொடரப்பட்டது.

தடைகளை தகர்த்தெறிந்து வெளியானது விஸ்வரூபம்-2! குறித்த செய்திக்கு

இந்த வழக்குகளையெல்லாம் வென்று, தடைகளை தகர்த்தெறிந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது விஸ்வரூபம்.

Vishwaroopam II, Kamal Hassan Vishwaroopam 2 Tamil Movie Live Updates:விஸ்வரூபம் 2 லைவ் அப்டேட்ஸ்:

12:35 PM :கடலூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 திரைப்படம் இன்று வெளியாகவில்லை. திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே உடன்பாடு ஏற்படாததால் படம் வெளியாகவில்லை.

12:25 PM: படத்தின் தொடக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தீம் பாடலான ‘நாளை நமதே’  பின்னணியில் ஒலிக்கிறது.

12:15 PM: சென்னை தி.நகர் ஏஜிஎஸ் தியேட்டரில் தொழில்நுட்பக் காரணங்களால், படம் ரிலீஸ் சற்றே தள்ளிப் போனது. எனினும் சின்னதான சலசலப்புகளுக்கு பிறகு படம் ரிலீஸ் ஆனது.

12:00 PM: விஸ்வரூபம் 2 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஷால் ட்வீட் செய்திருக்கிறார்.

11:40 AM : சென்னை தி.நகர் ஏஜிஎஸ் தியேட்டரில் பகல் 12 மணிக்கு மேல் தொடங்கவிருக்கும் ஷோ-வுக்கு டிக்கெட் கவுண்டரில் சொற்ப நபர்களின் தலைகளே தென்பட்டன.

Vishwaroopam 2 Movie, Vishwaroopam II Review, Vishwaroopam 2 Tamil Movie Release Date, Songs, Download, Vishwaroopam 2 Ticket Booking
Vishwaroopam II Tamil Movie: விஸ்வரூபம் 2 ரிலீஸ் ஆன சென்னை தியேட்டர் ஒன்றின் டிக்கெட் கவுண்டர்

11:00 AM : நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் செய்தியில், ‘ஜாம்பவான் கமல்ஹாசனுக்கும், அவரது விஸ்வரூபம் 2 சூப்பர் வெற்றிக்கும் வாழ்த்துகள்’ என குறிப்பிட்டார்.

10:45 AM : தயாரிப்பாளர் வெங்கட்பிரபு வெளியிட்ட செய்தியில், ‘விஸ்வரூபம் 2-க்காக காத்திருக்கிறேன். ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்’ என கூறியிருக்கிறார்.

10:30 AM : விஸ்வரூபம் 2 இன்று வெளியான நிலையில், பிக் பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள “ பியார் பிரேமம் காதல் ” படமும் இன்று வெளியாகிறது. இந்நிலையில், ஹரிஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் விஸ்வரூபம் 2 படத்திற்கான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

10:00 AM: படத்தின் தொடக்க காட்சியிலேயே பூஜா குமார் மற்றும் ஆன்டிரியாவிற்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்படுவது போன்ற காட்சி உள்ளதாக கூறப்படுகிறது.

9:40 AM: விஸ்வரூபம் 2 படம், இன்று மூன்று மொழிகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

9:25 AM: தமிழகத்தில் காலை 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய காட்சி, சென்னையில் காசி தியேட்டரிலும் மற்றும் நெல்லை மாவட்டத்தில் ராம் முத்துராம் தியேட்டரில் என இரண்டு தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட்டது.

Vishwaroopam 2 Movie, Vishwaroopam II Review, Vishwaroopam 2 Tamil Movie Release Date, Songs, Download, Vishwaroopam 2 Ticket Booking
Vishwaroopam II Tamil Movie: விஸ்வரூபம் 2 படம் பார்க்க காசி தியேட்டரில் குவிந்த ரசிகர்கள்

9:15 AM : இந்த படம் குறித்து இந்தியன் எச்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு கமல் ஹாசன் அளித்த பேட்டியில், “ 2008ம் ஆண்டு தசாவதாரம் படத்தின்போதே, புவியியல் அறிவியல் குறித்த ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது. அந்த ஆர்வத்தை பயன்படுத்தி மக்களுக்கு ஒரு நல்ல திரைப்படம் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதை தான் விஸ்வரூபம் முதல் பாகத்தில் செய்தேன், இரண்டாம் பாகத்திலும் செய்திருக்கிறேன்.” என்றார்.

9:00 AM : பல்வேறு தடைகளை வென்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது விஸ்வரூபம் 2 திரைப்படம்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vishwaroopam 2 movie release