/tamil-ie/media/media_files/uploads/2018/08/Viswasam-poster.jpg)
Viswasam Pre Release Business, Viswasam Total Collection, விஸ்வாசம், அஜீத்குமார்
Ajith Viswasam first look poster : நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Viswasam : விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
இயக்குநர் சிவா இயக்கத்தின் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் போஸ்டர் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியானது. இதில் அஜித் இரட்டை வேடத்தில் அசத்தலாக இருக்கிறார்.
தல ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய பிரபலம்
ஒரு அஜித் தந்தை கேரக்டரிலும், மற்றொரு அஜித் மகனாகவும் நடிக்கிறார். இதில் தந்தை அஜித்துக்கு ‘காலா’ நாயகி கஸ்தூரி ராவ் ஜோடியாக நடிக்கிறார். மகன் அஜித்துக்கு நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் போஸ்டர்களை வெளியிட்டது.
August 2018#ViswasamFirstLook Praise God!@SathyaJyothi_@directorsiva@SureshChandraapic.twitter.com/NYKn7If9Dy
— D.IMMAN (@immancomposer)
#ViswasamFirstLook Praise God!@SathyaJyothi_@directorsiva@SureshChandraapic.twitter.com/NYKn7If9Dy
— D.IMMAN (@immancomposer) August 23, 2018
நடிகர் அஜித்துக்கு முதல் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.