/tamil-ie/media/media_files/uploads/2018/10/Viswasam-Second-Look-poster.jpg)
Viswasam Second Look poster
Viswasam Second Look poster : தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் 2வது லுக் போஸ்டர் இன்று காலை 10:30 மணிக்கு வெளியானது. இணையதளம் முழுவதும் விஸ்வாசம் பொங்கல் என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
பில்லா படத்திற்கு பிறகு நடிகர் அஜீத் நடிக்கும் இரட்டை வேடப் படம் தான் விஸ்வாசம். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. தல அஜித் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இரண்டு அஜித்களுக்கு ஜோடியாக காலா ஈஸ்வரி மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர்.
Viswasam Second Look poster : விஸ்வாசம் 2ம் போஸ்டர் ரிலீஸ்
அவர்களுடன் விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் 2ம் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது. டி. இமான் இசையமைக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் போஸ்டர், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வியாழக் கிழமை வெளியானது.
Presenting the second look of @ViswasamOffl@directorsiva@SureshChandraa@vetrivisuals@immancomposer@AntonyLRuben@dhilipaction@kjr_studios@DoneChannel1#ViswasamSecondLook#ViswasamPongal#ViswasamThiruvizhapic.twitter.com/zOmkx1Zlaq
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) 25 October 2018
அதே போல 2வது போஸ்டரும் வியாழக்கிழமையான இன்றே வெளியானது. இந்த போஸ்டரில் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தல அஜித் படம் என்றாலே வியாழக் கிழமை செண்டிமெண்ட் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
விஸ்வாசம் படத்தில் தல அஜித் இந்த ஊர் தமிழ் தான் பேசிகிறார்... இன்னொரு சர்பிரைஸ் கூட இருக்கு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.