/tamil-ie/media/media_files/uploads/2018/12/viswasam-in-russia-2.jpg)
சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் தமிழில் வசூலை அள்ளிக் குவித்து வரும் விஸ்வாசம் தெலுங்கு மொழியில் பட்டையை கிளப்பி வருகிறது.
கடந்த ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் விஸ்வாசம். இந்த படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 4வது படமாகும். நயன்தாரா, அனிகா, கோவை சரளா, ரோபோ சங்கர், விவேக் மற்றும் தம்பி ராமைய்யா என பலரும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
400 தியேட்டரில் தெலுங்கு விஸ்வாசம்
இந்த படம், தமிழ் மொழியிலேயே முதலில் வெளியானது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இப்படம் வசூல் வேட்டையில் பட்டையை கிளப்பியது. அதன் பிறகு பல படங்கள் வெளியான போதிலும், தியேட்டர்களை விட்டு நீங்காமல் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஹவுஸ் ஃபுல் ஆகும் ஒரே படம் இது தான்.
கோடி கோடியாக சம்பாதித்தாலும் தல அஜித்தின் மனைவி ஷாலினி இதை தான் விரும்புகிறார்
குடும்பக் கதையில் மக்களின் மனதை ஆழமாக தொட்டிருக்கும் இந்த படம் தற்போது தெலுங்கு மொழியிலும் வெளியானது. ஆந்திராவில் சுமார் 400 தியேட்டர்களில் இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழில் எந்த அளவிற்கு சாதனை படைத்ததோ அதே அளவிலான சாதனையை படைக்கும் முயற்சியில் தெலுங்கிலும் இறங்கியுள்ளது. 400 தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்களில் இந்த படத்திற்கு கூட்டம் அலைமோதுகிறது. தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்த ஆண்டின் தொடக்க வசூல் மன்னன் அஜித் தான் என்பது உறுதியாகுமா என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.