சித்ரா முகத்தில் காயம்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

விசாரணையில் தனக்கும் சித்ராவுக்கும் 2 மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் ஆனதாக ஹேம்நாத் தெரிவித்துள்ளார்.

விசாரணையில் தனக்கும் சித்ராவுக்கும் 2 மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் ஆனதாக ஹேம்நாத் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
VJ Chithra Suicide, Pandian Stores Mullai Death

வி.ஜே.சித்ரா

VJ Chithra: சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா தற்கொலை செய்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெர்சனலா? புரபஷனலா? சித்ரா மறைவுக்கு என்ன காரணம்?

Advertisment

VJ Chithra Dead Body வி.ஜே.சித்ராவின் முகத்தில் ஏற்பட்டுள்ள காயம்

சென்னை திருவான்மியூரை சேர்ந்த சித்ரா, சின்னத்திரையில் நடிகை, தொகுப்பாளினி, டான்ஸர் என பல திறமைகளுக்கு சொந்தக்காரர். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 4 அண்ணன் தம்பிகளை மையப்படுத்திய இந்த சீரியலில், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த குமரனுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

சித்ராவுக்கும் சென்னையைச் சேர்ந்த ஹேம்நாத் ரவி என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து 2021 ஜனவரியில் இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இன்று அதிகாலை படபிடிப்பை முடித்துவிட்டு, ஓட்டல் அறைக்கு திரும்பிய சித்ரா, தற்கொலை செய்துக் கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடன் நிச்சயமான ஹேம்நாத் ரவியுடன் அவர் ஓட்டலில் தங்கியிருக்கிறார். தான் குளிக்கப் போவதாகக் கூறி தன்னை வெளியில் இருக்கும்படி ஹேம்நாத் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment
Advertisements

பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘முல்லை’ விஜே சித்ரா திடீர் தற்கொலை: அதிர்ச்சியில் கலைத்துறை

VJ Chithra Suicide சித்ராவின் கடைசி இன்ஸ்டாகிராம் படம்

இந்நிலையில், சித்ராவின் மரணம் குறித்த விசாரணையில் நசரத்பேட்டை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விசாரணையில் தனக்கும் சித்ராவுக்கும் 2 மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் ஆனதாக ஹேம்நாத் தெரிவித்துள்ளார். அதோடு சித்ரா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். திருமணம் தொடர்பான முறையான ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இதனை உறுதி செய்ய முடியும் என போலீஸார் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு சித்ரா முகத்தில் உள்ள காயங்கள் எதனால் ஏற்பட்டது? இது தற்கொலை தான் எனும் பட்சத்தில் அதற்குக் காரணம் குடும்பப் பிரச்னையா? அல்லது தொழில் சார்ந்த வேறேதும் பிரச்னையா என்ற கோணத்தில் தற்போது போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: