அந்த கடைசி டயலாக் சித்ராவோட ரியல் லைஃப்: எமோஷனல் ட்ரைலர்
விஜே சித்ரா இறப்பதற்கு முன்பு நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் ட்ரைலரில் அவர் பேசியுள்ள டயலாக் அவருடைய ரியல் லைஃபை சொல்வதைப் போல எமோஷனலாக இருப்பதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
விஜே சித்ரா இறப்பதற்கு முன்பு நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. அதில், விஜே சித்ராவின் டயலாக் அவருடைய ரியல் லைஃபை சொல்வதைப் போல எமோஷனலாக இருப்பதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
Advertisment
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய, விஜே சித்ரா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை என்று படிப்படியாக உயர்ந்த விஜே சித்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பூந்தமல்லி அருகே ஒரு தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக விஜே சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
விஜே சித்ராவின் மரணம் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்திலும் தமிழ் சினிமா உலகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜே சித்ராவின் மரணத்தை தொடர்ந்து அவரைப் பற்றிய வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் விஜே சித்ரா இறப்பதற்கு முன்பு முதலும் கடைசியுமாக நடித்த கால்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. கால்ஸ் படத்தை சபரிஷ் இயக்கியுள்ளார். இன்ஃபினிட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
கால்ஸ் திரைப்படத்தில் விஜே சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த ட்ரைலரில் விஜே சித்ரா பேசியுள்ள வசனங்கள் அவருடைய நிஜ வாழ்க்கைக்கும் அவருடைய துயரமான முடிவுக்கும் பொருந்திப்போவதால் ரசிகர்கள் பலரும், கால்ஸ் ட்ரைலரில் பேசும் அந்த கடைசி டயலாக அப்படியே அவருடைய ரியல் லைஃப்-ஐ சொல்வதாக எமோஷனலாக உள்ளது என்று ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர்.
விஜே சித்ரா நடித்துள்ள கால்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர், “இந்த ஒலகத்தில நானும் பல கனவுகளோட பொறந்திருக்கேன். எனக்கும் சில ஆசைகள் தேவைகள்ளாம் இருக்கு. அது யாருக்குமே புரியல...” என்ற வசனத்துடன் தொடங்குகிறது.
அதோடு கடைசியாக, விஜே சித்ரா “அந்த ஆள் மட்டும் என் வாழ்க்கையில வரலனா, நானும் இந்த ஒலகத்தில ஒரு சராசரி மனுஷியா வாழ்ந்திருப்பனோ என்னவோ? அந்த பிரபஞ்சத்துக்குதான் வெளிச்சம்.” என்று கூறுகிறார். இந்த வசனம்தான் விஜே சித்ராவின் ரியல் லைப்-ஐ சொல்வதாக எமோஷனலாக கூறி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"