/tamil-ie/media/media_files/uploads/2020/06/Won_t_Force_My_3464-4.jpg)
vj manimegalai instagram
vj manimegalai instagram : ”அந்த காலம் அது அது.. சன்மியூசிக்கில் விஜே மணிமேகலை காலம். இந்த காலம் இது இது இதுவும் இன்ஸ்டாவில் விஜே மணிமேகலை காலம்” விஜே மணிமேகலை பற்றி தெரியாத 90கிட்ஸ்களே கிடையாது.
ஸ்கூல், காலேஜ் படிக்கும் காலத்தில் சன்மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமான இவருக்கு
ஃபேஸ்புக்கில் பல ரசிகர் பக்கங்கள் இருந்தனர். பாட்டு கேட்பதற்காக போன் செய்வதை விட இவரிடம் பேசுவதற்காக போன் செய்யும் ரசிகர்களே அதிகம்.
கல்லூரியில் சேர்ந்ததுமே மீடியா வேலைக்கு வந்தவர் மணிமேகலை. முதல் வேலையே தொகுப்பாளினியாகக் கிடைத்ததால் படித்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தார். அப்போது தான் மணிமேகலைக்கு நடன இயக்குனர் ஹூசனுக்கு காதல் ஏற்பட்டது. இவர்களின் காதல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கல்யாணத்தில் முடிந்தது.
vj manimegalai instagram : மணி - ஹூசைன் அட்டகாசங்கள்!
ஹூசனை திருமணம் செய்ய மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் எதிரொலியாக வீட்டை விட்டு வெளியேற் மணிமேகலைக்கு அவர்களின் நண்பர்கள் திருமணம் செய்து வைத்தனர்.தனது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் தனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்ட இந்த ஜோடி இப்போது சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கேம் ஷோ தொடங்கி அனைத்திலும் இவர்களின் ஒற்றுமை, செல்ல சண்டைகள் பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. வீட்டில் செல்ல பெண்ணாக வளர்ந்த மணிமேகலை இப்போது குடும்ப பொறுப்பை வழி நடத்துகிறார். இதை அவரே வியந்து ஒரு பேட்டியிலும் கூறியுள்ளார்.
இவர்களின் ஒற்றுமை திருமணம் ஆன அனைவரையும் பொறாமை பட வைப்பதே உண்மை. இன்னும் சின்ன பிள்ளை போல் மணி செய்யும் அட்டகாசங்களை ஹூசைன் ரசிப்பது, போட்டு தாருமாறாக கலாய்த்து தள்ளுவது என பயங்கர ரகளை. சமீபத்தில் லாக்டவுனில் கிராமத்தில் மாட்டிக் கொண்ட இந்த ஜோடி தினமும் வெளியிட்ட வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
கிட்டத்தட்ட 1 மாதம் காலம் வரை இருவரும் கிராமத்திலேயே தங்கி வாழ்ந்தனர். அங்கிருந்த சிறுவர் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டு சமைத்து கொண்டு மணி - ஹூசைன் செய்த அட்டகாசங்கள் பயங்கர லூட்டி. இதிலிருந்து மணிமேகலையை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்கள் அதிகமாகி விட்டனர் என்று தான் கூற வேண்டும்.மணிமேகலை எந்த போஸ்ட் செய்தாலும், புகைப்படங்களை பகிர்ந்தாலும் லைக்ஸ்கள் அள்ளுகிறது.
குடும்பமே கைவிட்டாலும் வனிதாவின் முயற்சி கைவிடவில்லை! மகள்களுக்காக தான் இத்தனையும்
ஏன் மணிமேகலை பக்கத்தில் கடைக்கு சென்று வந்தால் கூட,அவருக்கே தெரியாமல் ரசிகர்கள் ஃபோட்டோ எடுத்து அக்கா #besafe என்று டேக் செய்து அன்பு மழையை பொழிகிறார்கள் என்றால் பார்த்துக்கோங்க.
டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.