மணிமேகலை முறுக்கு ஃபேக்டரி: அப்போ தொகுப்பாளினி வேலை காலியா?

ஒரு ரேஷன் கார்டு வாங்கிட்டு இங்கேயே செட்டில் ஆகிட வேண்டியது தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஒரு ரேஷன் கார்டு வாங்கிட்டு இங்கேயே செட்டில் ஆகிட வேண்டியது தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
VJ Manimegalai Murukku Factory

VJ Manimegalai Murukku Factory

VJ Manimegalai: கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொலைக்காட்சித் துறையில் இருப்பவர் விஜே மணிமேகலை. சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்த அவர், கடந்த 2017 ஆம் ஆண்டு ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Advertisment

தமிழ்நாடு ஸ்பெஷல்: பி.எஸ்.என்.எல். தினமும் 1.8 ஜி.பி. காம்போ… மிஸ் பண்ணாதீங்க!

https://www.instagram.com/tv/CAVE7zGnSGT/?utm_source=ig_web_copy_link

திருமணத்திற்கு பிறகும் தொகுப்பாளினி பணியைத் தொடர்ந்தவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான, மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து குக் வித் வித் கோமாளி நிகழ்ச்சியில், மணிமேகலை செய்த கோமாளித் தனங்களால் ரசிகர்களிடம் பிரபலமானார். கிராமத்திற்கு சென்றிருந்த அவர், பொது முடக்கத்தால் அங்கேயே மாட்டிக்கொண்டார். தற்போது மணிமேகலையும் அவரது கணவரும் கிராமத்தில் தங்களது நாட்களை கழித்து வருகின்றனர். கிராமத்து சிறுவர்களுடன் விளையாடுவது, உள்ளிட்ட வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட மணிமேகலையின் பிறந்தநாளுக்கு, கிராமத்து சிறுவர்கள் மூலம் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் அவரது கணவர் ஹுசைன்.

மாஸ்க்குடன் மருத்துவமனையில் அஜித் – ஷாலினி : வைரலாகும் வீடியோ

இந்நிலையில் தற்போது தன்னுடைய பெயரில், மணிமேகலை முறுக்கு ஃபேக்டரி என்ற ஒன்றை ஆரம்பித்துள்ளதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மணிமேகலை. இரண்டு பெண்கள் முறுக்கு பிழிய அதை எண்ணெயில் பொரித்து எடுக்கிறார் மணி. ஒரு ரேஷன் கார்டு வாங்கிட்டு இங்கேயே செட்டில் ஆகிட வேண்டியது தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். முறுக்கு ஃபேக்டரி ஆரம்பித்து அதில் பிஸியாகி விட்டால், தொகுப்பாளினி வேலையை என்ன செய்வார் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisment
Advertisements

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vj Manimegalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: