VJ Manimegalai : தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலை விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இது குறித்த செய்தியையும் நாம் முன்பே வெளியிட்டிருந்தோம். தற்போது அவர் பட்டி மன்ற பேச்சாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் அவர்கள் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் உலகில் இன்றியமையாதாது காதலா? கலையா? என்ற தலைப்பில் காதல் சார்பில் பேசினார் மணிமேகலை. ”உலகத்தின் மையப்புள்ளி காதல் தானே தவிர கலை அல்ல. எதாவது பிரச்னை என்றாலோ, யாரையாவது மாற்ற வேண்டும் என்றாலோ அதற்கு அன்பு தான் கை கொடுக்குமே தவிர, கலை அல்ல. எந்த வேலை வெட்டிக்கும் போகாத ஒருவனுக்கு, காதலி வந்தவுடன் தனது சேஃப் ஸோனிலிருந்து வெளிவந்து, உழைக்க ஆரம்பிக்கிறான். காதலை சொல்வதற்கு கலை முக்கியம் என எதிரணியினர் சொல்கிறார்கள். ஆனால் காதல் வந்தால் ஆடத் தெரியாதவன் ஆடுவான், பாடத் தெரியாதவன் பாடுவான். காதல் வந்தாலே கலை தானாக வரும். எதிரணிக்கு காதல் அமையவில்லை என காண்டாகி எதிர்க்கிறார்கள்.
கலையில் நிறைய பிரிவு இருக்கிறது, ஆனால் காதலில் அப்படியில்லை. கலையை கற்றுக் கொள்ள அதிக நேரமும், அதற்கான குருவும் தேவை. காதலில் அனைவருமே குருக்கள் தான், கால நேரமும் செலவாகாது. கலை பிடிக்கும் என்பதற்காக, மதியம் 12 மணிக்கு பாட்டு பாட முடியாது. ஆனால் காதலிப்பவனுக்கு மழை, வெயில் என எதுவும் கிடையாது. வாழ்க்கையில் தன்னம்பிக்கைக் கொடுப்பது காதல் தான். காதல் உயிர் போல, கலை சட்டை, செயின், பிரேஸ்லெட் மாதிரி. ஆகையால் கலையைக் கற்றுக் கொள்ளவும், அதன் மேல் கொள்ளும் காதல் தான் காரணம்” என்றார்.