VJ Manimegalai: சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது கரியரை தொடங்கி, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் வி.ஜே. மணிமேகலை. பெற்றோர் எதிர்ப்புகளை மீறி, உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
கார்த்தியின் சிறந்த நடிப்பை பறைசாற்றும் 5 படங்கள்!
திருமணத்திற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் தனது கணவருடன் கலந்துக் கொண்டார். அதோடு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, பல்வேறு கோமாளி தனங்களை செய்தார். தவிர, விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்த மணிமேகலை ஊரடங்கு உத்தரவு காரணமாக, 2 மாதங்களாக அங்கேயே மாட்டிக் கொண்டார்.
,
கிராமத்து வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வந்தார். மாடு மேய்ப்பது, வரட்டி தட்டுவது, முறுக்கு சுடுவது என ஜாலியாக பொழுதை போக்கினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் சென்னை திரும்பினார். இரவு, பகல் என பாராமல் கிராமத்தில் வெளியே சுற்றித் திரிந்ததால் கறுத்துப் போயிருக்கிறார் மணிமேகலை. சென்னை திரும்பியதும் தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ”சென்னை வந்தாச்சு... இனி உனக்கு நான், எனக்கு நீ, நமக்கு அந்த சமையல்கார அக்கா தான்” என பதிவிட்டிருந்தார்.
மணப்பெண்ணுக்கு கொரோனா – திருமணம் முடிந்ததும் தனிமை : என்ன கொடுமை சார் இது…?
இந்தப் படத்தில் கறுத்துப் போயிருக்கும் மணிமேகலையை பார்த்து, ‘என்ன இப்படி கறுத்துப் போய் விட்டீர்கள்?’ என கேள்வி எழுப்பினார்கள் ரசிகர்கள். அதற்கு மணிமேகலை, ’கிராமத்தில் கொஞ்ச நஞ்ச ஆட்டமா?? அதான்... கொஞ்சம் இல்ல நிறையவே கறுத்துப் போய் விட்டேன்’ எனக் கூறியுள்ளார். அதோடு இனி ஒவ்வொரு வருடமும் அந்த கிராமத்திற்கு சென்று, பொழுதை கழிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”