scorecardresearch

ராணாவின் வாழ்க்கைத் துணை: யாரிந்த மிஹீகா?

இந்த ரிலேஷன்ஷிப் இதுவரை வெளியில் தெரியாமல் இருந்ததால், அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ள, ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராணாவின் வாழ்க்கைத் துணை: யாரிந்த மிஹீகா?
miheeka bajaj, telugu actor rana

Miheeka Bajaj : நேற்று மாலை தெலுங்கு நடிகர் ராணா மிஹீகா பஜாஜ் உடன் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தார். இன்ஸ்டாகிராம் பதிவில், தனது வருங்கால வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து,’அவள் எஸ் சொன்னாள்’ என்று குறிப்பிட்டிருந்தார் ராணா. இந்த ரிலேஷன்ஷிப் இதுவரை வெளியில் தெரியாமல் இருந்ததால், அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ள, ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஊரடங்கு தளர்த்திக் கொள்ளப்படாவிட்டால், தற்போதைவிட அதிக விதிமீறல்கள் நடக்கும்

மீஹீகா ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது பெற்றோர் சுரேஷ் பஜாஜ் மற்றும் பண்டி பஜாஜ். இன்டீரியர் டிசைன் மற்றும் அலங்கார பிசினஸில் இருக்கும் மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தை நடத்துகிறார். இந்நிறுவனம் திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளை திட்டமிட்டு நடத்தி தருகிறது. செல்சியா பல்கலைகழகத்தில் இன்டீரியர் டிசைனிங்கில், முதுகலை பட்டம் பெற்றவர் மிஹீகா.

”பாரம்பரியம் நிறைந்த நகரத்தில் வளர்ந்து, எனது குழந்தைப்பருவ நினைவுகள் துடிப்பான கலகலப்பான ஆச்சரியமான எண்ணங்களால் நிறைந்தவை. என் அம்மாவுடன் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று வந்துள்ளேன்” என இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் மிஹீகா. மேலும் தொடர்ந்த அவர், ”பூக்கள், குதிரைகள், அரண்மனைகள், நகைகள், கட்டிடக் கலைகள் ஆகியவற்றின் மீது கொண்டிருந்த காதல் என் ஆர்வத்தை மேலும் தூண்டியது. செல்சியா பல்கலைகழகத்தில் இன்டீரியர் டிசைனிங் முதுகலைப் பட்டம் பெற்ற நான், ஈவன்ட் மேனேஜ்மெண்ட்டில் நுழைந்தேன். வாடிக்கையாளரின் கனவை யதார்த்தமாக்குவது என்னை திருப்தியாக உணரச் செய்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

மிகிகாவின் அம்மா பண்டி, க்ர்சலா என்ற நகை பிராண்டின் இயக்குனராகவும் வடிவமைப்பாளராகவும் உள்ளார். தனது வெற்றிக்கு அம்மாவும் மிகப்பெரிய காரணம் என பெருமைப்பட்டுக் கொள்கிறார் மீஹீகா. ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், ”டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் வெற்றிக்கு காரணம் நீங்கள் தான். எப்போதும் எனக்கு பக்க பலமாக இருப்பதற்கு நன்றி. ஒரு பெண்ணுக்கு தாயில்லாமல் வேறு எதுவுமே சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்திய எல்லையில் பதற்றம்… சீனாவுக்கு எதிராக ராணுவம் குவிப்பா?

கடந்த 2018-ல் ஒரு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில், ”உணவுதான் என்னுடைய மிகப்பெரிய பேஸன். சமைப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று. புத்தகங்களை படிப்பது எனக்கு பிடிக்கும். எப்போதாவது எழுதுவேன். எதிர்காலத்தில் ஆடம்பர பரிசுக்காக ஒரு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளேன். காரணம், எனக்கு பரிசளிப்பது மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Who is miheeka bajaj telugu actor rana daggubati fiance

Best of Express