Advertisment

யாஷிகா – ரிச்சர்ட் காதல் உண்மையா? யாஷிகா அம்மா விளக்கம்

ரிச்சர்ட்டை காதலிக்கிறாரா யாஷிகா? மகளின் காதல் விவகாரம் குறித்து அம்மா விளக்கம்

author-image
WebDesk
Jun 06, 2023 22:38 IST
Richard Rishi

ரிச்சர்ட் ரிஷி - யாஷிகா ஆனந்த்

நடிகர் ரிச்சர்ட் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து யாஷிகாவின் அம்மா விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்வதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்திக்கு ரிச்சர்ட் மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால் கிட்டத்தட்ட இந்த செய்தி உறுதியானதாக கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்: வடமாநில சிவன் கோவில்: நந்தி காதில் வேண்டுதல் வைத்த குஷ்பூ; போட்டோஸ்

இந்தநிலையில், ரிச்சர்ட் மீண்டும் யாஷிகா உடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதுவும் அந்த புகைப்படத்தில் ரிச்சர்டிற்கு யாஷிகா முத்தம் கொடுத்தபடி போஸ் கொடுத்து இருந்தார். இந்த போட்டோவுக்கு ஹார்டின் எமோஜியையும் பதிவிட்டு இருந்தார். மேலும், அடுத்தடுத்து யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ரிச்சர்ட் பதிவிட்டு வந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இருவரும் காதலிப்பதாக நினைத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவிட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தற்போது யாஷிகாவின் அம்மா இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ”ரிச்சர்ட் மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர், படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களைத் தான் இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர், அதை வைத்து இருவருக்கும் காதல் என்று எழுதி வருகின்றனர். இந்த செய்தியில் உண்மை இல்லை, இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகும் போது அனைவருக்கும் உண்மை தெரியும்” என்று யாஷிகாவின் அம்மா தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரிச்சர்ட் மற்றும் யாஷிகா இருவரும் காதலிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Yashika #Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment