Advertisment

தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறது; சல்மான் கானின் எண்டம்மா பாடலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் எதிர்ப்பு

படப்பிடிப்பு தளமாக இருந்தாலும், அது கோயிலாக முன்னிறுத்தப்படுகிறது. அங்கு காலணிகள் அணியாமல் இருக்க வேண்டும்; சல்மான் கானின் எண்டம்மா பாடலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் எதிர்ப்பு

author-image
WebDesk
New Update
Yentamma

சூப்பர் ஸ்டார்கள் சல்மான் கான், வெங்கடேஷ் டகுபதி மற்றும் ராம் சரண் ஆகியோர் எண்டம்மா பாடலின் ஸ்டில் ஒன்றில்.

இது லுங்கியா அல்லது வேட்டியா? முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணனைப் பொறுத்தவரை, அதனை எப்படி எடுத்துக் கொண்டாலும் புண்படுத்துகிறது. சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் கிசி கா பாய் கிசி கி ஜானின் சமீபத்திய பாடல் எண்டம்மா இணையத்தில் ஒரு பிரிவினருக்கு விருப்பமானதாக இல்லை, இந்த இசை வீடியோ மோசமான சுவையில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

Advertisment

இந்தி-தெலுங்கில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல், ஒரு கொண்டாட்ட டிராக்காக ஏற்றப்பட்டுள்ளது, இதில் சல்மான் கான், வெங்கடேஷ் டகுபதி மற்றும் RRR நட்சத்திரம் ராம் சரண் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். ரஃப்தாரின் ராப் போர்ஷன்களுடன், பாயல் தேவ் இசையமைத்து விஷால் தத்லானி மற்றும் பாயல் பாடிய இந்தப் பாடலில், மூன்று நடிகர்களும் லுங்கி அணிந்து ஆடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: உதயநிதிக்கு விஜயகாந்த் செய்த உதவிகள்: இதுவரை வெளி வராத ரகசியம்

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ட்விட்டரில், படத்தின் தயாரிப்பாளர்கள் லுங்கி போன்ற "கிளாசிக்கல் உடையை" "அருவருப்பான முறையில்" எண்டம்மா வீடியோவில் காட்டியுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும், "இது மிகவும் கேலிக்குரியது மற்றும் நமது தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறது. இது லுங்கி அல்ல, இது ஒரு வேட்டி. ஒரு கிளாசிக்கல் உடையான வேட்டி, அருவருப்பான முறையில் காட்டப்பட்டுள்ளது," என்றும் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பயனர் அவர்கள் கோவிலுக்குள் காலணிகள் அணிந்திருப்பதாக எழுதியபோது, ​​முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், தற்போதைய காலத்திற்கு தேவையான சிறந்த ஆராய்ச்சி என்று கூறினார். மேலும், “இப்போது மக்கள் பணத்திற்காக எதையும் செய்கிறார்கள். லுங்கி, வேட்டி என்றால் என்ன என்று ஆராய்ச்சி செய்யமாட்டார்களா. அது ஒரு படப்பிடிப்பு தளமாக இருந்தாலும், அது கோயிலாகவே முன்னிறுத்தப்படுகிறது. கோவில் வளாகத்திற்குள் காலணிகள் அணியப்படவில்லை என்பதை திரைப்படத்துடன் தொடர்புடையவர்கள் உணர வேண்டும். இதை தடை செய்ய @CBFC_India க்கு வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

கிசி கா பாய் கிசி கி ஜான், ஈத் பண்டிகையின் போது ஏப்ரல் 21 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, சல்மான் கான் 2019 ஆம் ஆண்டு வெளியான தபாங் 3க்குப் பிறகு முழு அளவிலான பாத்திரத்தில் பெரிய திரைக்கு திரும்பியுள்ளார். ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கிய அதிரடி நகைச்சுவை படத்தில் ஷெஹ்னாஸ் கில், ராகவ் ஜூயல் மற்றும் சித்தார்த் நிகம் நடித்துள்ளனர்.

கிசி கா பாய் கிசி கி ஜான் என்பது 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான வீரம் படத்தின் ரீமேக் ஆகும், இது நான்கு இளைய சகோதரர்கள் தங்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்த அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும் கதை ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Salman Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment