Yogi Babu Weds Manju Bhargavi : தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கும் யோகி பாபு இன்று காலை ஆரணியில் உள்ள அவரது குலதெய்வ கோயிலில் வைத்து, மஞ்சு பார்கவி என்பவரை மணந்தார். மணப்பெண் மஞ்சு வேலூரை சேர்ந்தவர், இந்தத் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
”கர்மா உண்மையாக இருந்தால்…” சனம் ஷெட்டிக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
இன்று காலை (05.02.2020) எனது குலதெய்வ கோவிலில் வைத்து #மஞ்சுபார்கவிக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றது என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. pic.twitter.com/B1lChJFimd— Yogi Babu (@iYogiBabu) February 5, 2020
தனுஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் யோகி பாபு. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து வருகிறது. திருமணம் முடிந்தநிலையில், மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு பெரிதாக நடைபெறும் எனத் தெரிவித்திருக்கிறார் யோகிபாபு.
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.