Yogi Babu Marriage : தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு, கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி ஆரணிக்கு அருகிலுள்ள குலதெய்வ கோயிலில் வைத்து மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக நடந்த இந்தத் திருமணத்தில் சுமார் பத்து பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இது குறித்து குறுகிய நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார் யோகிபாபு. அதில், அனைவரையும் தனது திருமணத்துக்கு அழைக்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும், தனது சூழ்நிலை அப்படியாக இல்லை, என்று தெரிவித்து அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார். தனது குடும்பத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டதால், இப்படியானமுடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தான் தள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...
அதோடு தங்களை அழைக்கவில்லை என தனது திரையுலக நண்பர்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும், அவர்கள் தன்னை புரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் யோகிபாபு கேட்டுக் கொண்டுள்ளார். மார்ச் மாதத்தில் தனது திருமண ரிசப்ஷன் நடக்கவிருப்பதாகவும், அதற்கு அனைவரையும் அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.