scorecardresearch

ஜீ தமிழ் டு விஜய் டி.வி: வில்லி நடிகை ரீ என்ட்ரி; எந்த சீரியல் தெரியுமா?

விஜய் டிவி சீரியலில் என்ட்ரியாகும் ஜீ தமிழ் நடிகை; எந்த சீரியல்? என்ன ரோல்?

Swathi Royal
சீரியல் நடிகை சுவாதி

வில்லி நடிகையான சுவாதி விஜய் டிவியின் புதிய சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

கன்னடம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவர் சுவாதி ராயல். பெங்க்ளூருவைச் சேர்ந்த சுவாதி தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்: கல்யாண கோலத்தில் பிக் பாஸ் ஜூலி: ரசிகர்கள் திடீர் ஷாக்

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, தமிழ் இல்லத்தரசிகளின் பாராட்டைப் பெற்றார்.

தற்போது, விஜய் டிவியில் புதிதாக ஒளிப்பரப்பாகி வரும் ‘மோதலும் காதலும்’ சீரியலில் நடிக்க உள்ளார் சுவாதி. சீரியலில் ஹீரோ சமீருக்கு ஜோடியாக அஸ்வதி நடித்து வருகிறார். இந்தநிலையில், சீரியலில் சுவாதி குழந்தை தன்வீகாவின் அம்மா மிருணாளினி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே வில்லியாக மிரட்டியுள்ள சுவாதி, இந்த சீரியலிலும் வில்லியாக மிரட்ட உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் சீரியலை எதிர்ப்பார்த்து உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Zee tamil actress swathi royal enters vijay tv serial