Advertisment

10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை!

இந்த ஜோடி ’இன்ஸ்டாகிராம்' கணக்கில் மற்ற ஜோடிகளுக்கும் கப்பிள் கோல்ஸ் இலக்குகளை நிர்ணயித்து வந்தனர்.

author-image
WebDesk
Sep 15, 2020 21:02 IST
Poove Poochudava Dhanalakshmi gets married

பூவே பூச்சூடவா தனலட்சுமி

Zee Tamil, Poove Poochudava: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ தொடரில் கார்த்திக் வாசுதேவன், ரேஷ்மா, மதன் பாண்டியன், கிருத்திகா உள்ளிடோர் நடித்து வருகின்றனர். இதில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தனலட்சுமி.

Advertisment

நாதஸ்வரம் டூ பாரதி கண்ணம்மா: ரசிகர் பட்டாளத்தை பெருக்கிய ஸ்ருதி!

அவர் தனது நீண்ட கால நண்பன் (காதலன்) சிவாவை செப்டம்பர் 14-ம் தேதி, சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஜோடி 10 வருடத்துக்கும் மேலாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தது. அதோடு இந்த ஜோடி ’இன்ஸ்டாகிராம்' கணக்கில் மற்ற ஜோடிகளுக்கும் கப்பிள் கோல்ஸ் இலக்குகளை நிர்ணயித்து வந்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட சீனாவின் கண்காணிப்பு பட்டியலில் 30 நீதிபதிகள்

திருமணத்தில் தனலட்சுமி ஒரு சிவப்பு நிற பட்டு சேலை மற்றும் பெரிய டெம்பிள் டிஸைன் நகைகள் மற்றும் வளையல்களுடன் ஜோடியாக, தங்க மணிகள் கொண்ட ஒரு மெரூன் கலர் பிளவுஸ் அணிந்திருந்தார். மணமகன் சிவா, ஒரு கிரீம் நிற பட்டுச் சட்டையும், வேஷ்டியும் அணிந்திருந்தார்.

தற்போது இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

#Tv Serial #Zee Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment