Advertisment

நாதஸ்வரம் டூ பாரதி கண்ணம்மா: ரசிகர் பட்டாளத்தை பெருக்கிய ஸ்ருதி!

நாதஸ்வரம் சீரியலில் இவர் நடித்ததற்கு பிறகு, அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைக்கத் தொடங்கினர்.

author-image
WebDesk
New Update
Tamil Serial News, Bharathi Kannamma Serial Sruthi Shanmuga Priya

ஸ்ருதி சண்முகப்பிரியா

Tamil Serial News:  சீரியல் பிரபலங்கள் பலர் தங்கள் ரசிகர் வட்டத்தை பெரிதாக்கக் காரணம் அவர்களது யதார்த்தமான நடிப்பு தான். இந்த லிஸ்டில் ஸ்ருதி சண்முக பிரியாவும் அடங்குவார்.

Advertisment

கொரோனாவுக்கு அடுத்த பலி: பிரபல நடிகர் மரணம்

கல்லூரி படிக்கும் நேரத்தில் படிப்பையும் படித்துக்கொண்டு சீரியலிலும் நடித்துக் கொண்டு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இவரின் முதல் சீரியல் சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’. இதில் ராகினி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்டார்.

Sruthi Shanmuga Priya                                     கேஷுவல் லுக்கில் ஸ்ருதி சண்முகப்பிரியா.

அந்த சீரியலில் கோபியின் தங்கையாக அதுவும் ஒரு பியூட்டிஷியனாக  நடித்திருந்தார் ஸ்ருதி. முதல் சீரியலிலேயே தனது திறமையை முழுமையாக நிரூபிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதை சிறிதும் குறைவில்லாமல் அழகாகவே நடித்து முடித்திருந்தார். நாதஸ்வரம் சீரியலில் இவர் நடித்ததற்கு பிறகு, அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைக்கத் தொடங்கினர்.

Sruthi Shanmuga Priya 3                                                            தண்ணீருக்குள் ஜில்லென...

அந்த சீரியலை தொடர்ந்து பொன்னூஞ்சல், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது என்னவோ நாதஸ்வரம் தான். எப்போதும் புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வதில், ஸ்ருதிக்கு ஆர்வம் அதிகமாம். அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம், கூகுள் சர்ச் எஞ்சினில் பிஸியாகி விடுவாராம். அதனால் இப்போது லாக்டவுன் டைமிலும் ஆன்லைனில் படித்துக் கொண்டிருக்கிறாராம் ஸ்ருதி. அதனால் நேரம் போனதே தெரியவில்லையாம். இருந்தாலும் இப்போது ஷூட்டிங்கிற்காக வெளியே வருவது கொஞ்சம் பயமாக தான் இருக்கிறதாம்.

Sruthi Shanmuga Priya 2                                                                 ஒத்த கால் தவமோ?

இவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் ஸ்ருதிக்கு ரொம்பவே பிடித்ததாக இருக்கிறதாம். இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்துக் கொண்டிருப்பவர் நிஜ வாழ்க்கையிலும் இதே போல தான் அமைதியாக இருப்பாராம். ஷூட்டிங் டைமில் மட்டும் இல்லாமல் எப்பவுமே அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பாராம். ஆனால் சில நேரங்களில் நல்ல ஜாலியாக வடிவேலுவின் காமெடியை சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாராம். அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரோஷினி ஹரிப்ரியனுடன் நேரம் செலவிடுவதை விரும்புவாராம் ஸ்ருதி.

Sruthi Shanmuga Priya 1                                                                   ஸ்மைலிங் ஸ்ருதி

’இதனால தான் முதல்வன் படத்துல விஜய் நடிக்கல’ ரகசியம் உடைத்த ஷங்கர்!

தவிர, வாணி ராணி சீரியலில் உடன் நடித்த நவ்யா ஸ்ருதியின் க்ளோஸ் ஃப்ரெண்டாம். இது குறித்து முன்பு ஒரு நேர்க்காணலில் பேசிய ஸ்ருதி, “நான் ராணியோட மருமகள். நவ்யா வாணியோட மருமகள். எங்க இரண்டு பேருக்குமிடையே காம்பினேஷன் சீன்ஸ் அதிகம் இல்லைன்னாலும் நாங்க ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ். அப்போ செட்ல எல்லோர் கூடயும் பேசினாலும், நவ்யா கிட்ட மட்டும் தான் என் பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துப்பேன். அவளும் அப்படித்தான். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா செம லூட்டியா இருக்கும். ஆரம்பத்துல நவ்யா ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுவான்னு சொன்னாங்க. அதனால நானும் அவ கூட பேசவே இல்லை. `வாணி ராணி' சீரியல் ஷூட்டிங்கிற்காக ஆஸ்திரேலியாவிற்குப் போயிருந்தோம். அப்போதான் அவ ரொம்ப ஸ்வீட்னு தெரிஞ்சது. மனசுல தோணுறதை ஓப்பனா சொல்லிடுவா.” என்றார். வாணி ராணி சீரியல் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், அந்த நட்பு இன்னும் தொடர்கிறதாம்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment