/tamil-ie/media/media_files/uploads/2020/03/Serial-Artist-Shivani-Narayanan-Tamil-Serial-News.jpg)
Serial Artist Shivani Narayanan, Tamil Serial News
Shivani Narayanan : விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தவர் ஷிவானி நாராயணன். அந்த சீரியல் அவருக்கு சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, ’கடைக்குட்டி சிங்கம்’ சீரியலில் நடித்தார். பின்னர் திடீரென அதிலிருந்து வெளியேறி, ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’இரட்டை ரோஜா’ சீரியலில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.
ஏமி ஜாக்ஸன் செல்ஃப் குவாரண்டைன்: டிக் டாக்கில் அம்மாவுக்கு கம்பெனி கொடுத்த மகன்
சீரியலில் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும், தனது ஆன்லைன் ஃபேன்ஸ் மகிழும் படி, விதவிதமான படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஷிவானி. அதனால் சினிமா நடிகைகளைப் போலவே இவரை இன்ஸ்டாகிராமில் 13 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் பின்தொடர்கிறார்கள்.
View this post on InstagramThrowback ❤️ Shoot Times ... 6/21
A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் ஷிவானி. ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றிருக்கும், ‘வாத்தி கம்மிங் ஒத்து’ என்ற அந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வடுகிறார்கள். அந்த வகையில் ஷிவானியின் வீடியோவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிஎஃப் பணத்தை எடுக்க அரசு அனுமதி – நீங்க செய்ய வேண்டியது என்ன?
இதற்கிடையே தற்போது தனுஷின் ஒரு பாடலை பாடி, அதனையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் ஷிவானி. ’தங்க மகன்’ திரைப்படத்தில் பாடகி ஸ்வேதா மோகன் பாடியிருந்த, ’என்ன சொல்ல ஏது சொல்ல’ என்ற பாடல் தான் அது. இதன் மூலம் ஷிவானிக்கு நல்ல குரல் வளம் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.