பிஎஃப் பணத்தை எடுக்க அரசு அனுமதி - நீங்க செய்ய வேண்டியது என்ன?

EPFO: அகவிலைபடியுடன் மூன்று மாத அடிப்படைச் சம்பளத்துக்கு மிகாத தொகை அல்லது 75 சதவிகிதம் வரை அவர்களின் ஈபிஎஃப் கணக்கின் வரவுக்கான தொகை ஆகியவற்றில் எது...

EPF Withdraw: ஊரடங்குக்கு மத்தியில் 6 கோடி சந்தாதாரர்களை அவர்களது இபிஎப் பணத்தை எடுத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது.

கோவிட் -19 பரவுவதை தடுப்பதற்கான ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொழிலாளர் அமைச்சகம், ஓய்வூதிய நிதி அமைப்பான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (ஈபிஎப்ஒ) 6 கோடி சந்தாதாரர்கள் அவர்களது இபிஎப் கணக்கிலிருந்து அகவிலைபடியுடன் மூன்று மாத அடிப்படை சம்பளத்திற்கு மிகாத தொகையை எடுத்துக் கொள்ளலாம் என அனுமதித்துள்ளது.

தாராள மனதுடன் கடன் தரும் கனரா வங்கி! – கொரோனா கூட வாழ்த்திச் செல்லும்

மேற்கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மனித தலையீடு இல்லாமல் இணைய வழியில் claim settlement செய்யும் வசதியையும் அனைத்து KYC புகார் சந்தாதரர்களுக்கும் இந்த ஊரடங்கு நேரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (Employees’ Provident Fund Scheme 1952) திருத்தம் செய்ய அமைச்சகம் ஒரு அறிவிப்பானையையும் மார்ச் 28, 2020 அன்று வெளியிட்டுள்ளது என அமைச்சகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்தியரிக்கை தெரிவிக்கிறது.

கோவிட் -19 எதிர்கொள்ள நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அகவிலைபடியுடன் மூன்று மாத அடிப்படைச் சம்பளத்துக்கு மிகாத தொகை அல்லது 75 சதவிகிதம் வரை அவர்களின் ஈபிஎஃப் கணக்கின் வரவுக்கான தொகை ஆகியவற்றில் எது குறைவாக இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம் (non-refundable withdrawal) என அந்த அறிவிப்பானை அனுமதிக்கிறது.

கோவிட் -19 ஒரு தொற்று நோய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எனவே நாடுமுழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1952 ல் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்கள் இந்த non-refundable advance ன் நன்மைகளைப் பெற தகுதியானவர்கள்.

தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்கள் – கணக்கு வழக்கு தெரிஞ்சுகோங்க

இந்த அறிவிப்பானையை தொடர்ந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மேல் உடனடியாக செயலாக்கம் செய்ய தனது கள அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் claims களை உடனடியாக செயலாக்கம் செய்ய வேண்டும், இதன் மூலம் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராட பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close