செம்பருத்தி: காதல் கிளிகள் போட்டோ நல்லா பளிச்சுன்னு இருக்கா?

அந்த லாக்கெட்டில் ஆதி பார்வதி போட்டோ தான் வனஜா சொன்னபடி இருக்குது.

Sembaruthi Serial, Aadhi Parvathi
Sembaruthi Serial, Aadhi Parvathi

Zee Tamil, Sembaruthi Serial : செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி அம்மாவுக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சியா வந்து சேருது. ஒரு வழியா பார்வதி, ஆதி கல்யாணம் ஆன கோபத்தில் வேகமாக ரூமுக்குள் போயி அடைஞ்சு கிடந்த அகிலாண்டேஸ்வரி ரூமை விட்டு வெளியில் வந்துட்டாங்க. இருந்தாலும், இன்னும் அடி மேல அடின்னு சொல்ற மாதிரி இடியா ஒரு விஷயத்தை சொல்றா வனஜா. அகிலாண்டேஸ்வரி வீட்டு பூஜை ரூம் ரொம்ப விசேஷமானது. அந்த பூஜை ரூமுக்குள் போயி பூஜை செய்யறாங்க அகிலாண்டேஸ்வரி.

இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த ரேயான் – பாட்டி ராதிகா செம ஹேப்பி

வேணாம்னு சொல்லி கழட்டிப் போட்ட ஆதி கடவூர் பரம்பரை செயினை பூஜையில் வைத்து, வேண்டியபடி மீண்டும் அந்த செயினை கழுத்தில் போட்டுக்கொண்டு பந்தாவா கீழே வந்து, நடு ஹாலில் கால் மேல் கால் போட்டு சோஃபாவில் உட்கார்ந்துட்டாங்க. அப்போதுதான் வனஜா அந்த செயினை உத்து உத்து பார்க்கிறாள். அக்கா முதலில் இந்த செயினை கழட்டுங்கன்னு சொல்ல, கோபம் பொத்துக்கொண்டு வந்து விடுகிறது அகிலாண்டேஸ்வரிக்கு.

இப்போது தான் செயினை கழட்டிப் போட்டது தப்புன்னு பூஜையில் வச்சு போட்டுக்கிட்டு வரேன்.. அபசகுணமா கழட்டுன்னு சொல்றேன்னு, கம்பீரமா வனஜாவை நோக்கி கையை காமிக்கறாங்க அகிலாண்டேஸ்வரி. அக்கா.. அந்த செயின் லாக்கெட்ல என்ன போட்டோ இருக்கு தெரியுமான்னு வனஜா கேட்க. நம்ம முன்னோர்கள் போட்டோ என்று அகிலா தில்லா சொல்றாங்க. அக்கா ஐயோ.. அதுதான் இல்லை. முதலில் நான் சொல்றதை கேளுங்க, செயினை கழட்டி பாருங்கன்னு வனஜா சொல்ல…

’வாழ்க்கை சில மாற்றத்தை டிமாண்ட் செய்கிறது’: ’அரண்மனைகிளி’க்கு பை பை சொன்ன நீலிமா ராணி

அகிலாண்டேஸ்வரி அம்மாவும் செயினை கழட்டி பார்க்கறாங்க. அந்த லாக்கெட்டில் ஆதி பார்வதி போட்டோ தான் வனஜா சொன்னபடி இருக்குது. காதல் கிளிகள் போட்டோ நல்லா பளிச்சுன்னு இருக்கான்னு வனஜா மனசுக்குள் மைண்ட் வாய்ஸை தட்டி விடறா. அப்புறம் என்ன… நடு ஹாலில் எழுந்து நின்று பார்வதி என்று கூச்சல் போடறாங்க. பார்வதி பயத்தில் ஓடிவந்து நிற்க. மெதுவா நடந்து வந்து, பக்கத்தில் நின்னு லாக்கெட்டை பார்வதியிடம் காமிக்கறாங்க. பாவம் மூச்சை பிடிச்சுகிட்டு கத்தறாங்க. எப்படி இதுல உங்க போட்டோ வந்தது. பக்தி பூஜை விஷயங்களிலும் என்னை ஏமாத்திட்டீங்களான்னு கேட்டு அழறாங்க.. பாவம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zee tamil sembaruthi serial aadhi parvathi akilandeshwari

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com