’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்

சீரியல் ஷூட்டிங் எதும் நடக்காமல், ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

சீரியல் ஷூட்டிங் எதும் நடக்காமல், ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sembaruthi Serial Actor Kathir engaged to Sindhu

Sembaruthi Serial Actor Kathir engaged to Sindhu

ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் சீரியல் என்றால், சந்தேகத்திற்கு இடமின்றி, செம்பருத்தி சீரியலை சொல்லலாம். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சீரியல் ஷூட்டிங் எதும் நடக்காமல், ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்

Advertisment

இது ஒருபுறமிருக்க, இப்போது செம்பருத்தி சீரியல் நடிகர் கதிர்வேலின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது. ஜூலை 2-ம் தேதி, வியாழக்கிழமை சிந்து என்பவரை அவர் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். அதோடு தனது வருங்கால மனைவியை சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் கதிர்.

மனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க!

நிச்சயதார்த்த நிகழ்விலிருந்து ஒரு படத்தைப் பகிர்ந்த கதிர், “இந்த நாள் எனக்கு மிகப்பெரிய நாள்!! எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. என்னை மிகவும் நேசிக்கும் அனைவரையும் அழைக்காததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையின் மிகப்பெரிய மற்றும் மறக்கமுடியாத நாள் இது. முடக்கம் மற்றும் இ-பாஸ் பிரச்னை இருப்பதால், யாரையும் அழைக்க முடியவில்லை. என் திருமணத்திற்கு உங்கள் அனைவரையும் நிறைய அன்புடனும் பாசத்துடனும் அழைப்பேன் என்று சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு எங்களை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த அற்புதமான நாளில் உங்கள் எல்லா ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

செம்பருத்தி சீரியலில் அருண் வேடத்தில் கதிர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: