New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/Tamil-Serial-News-Zee-Tamil-Kathir-got-married.jpg)
செம்பருத்தி சீரியல் நடிகர் கதிர் திருமணம்
கதிர் நடிக்க வருவதற்கு முன்பு பல ஆண்டுகளாக வி.ஜே.வாக இருந்தார்.
செம்பருத்தி சீரியல் நடிகர் கதிர் திருமணம்
Sembaruthi Serial Actor Kathir: சின்னத்திரை ரசிகர்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்றிருக்கிறது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் இருக்கும் நிலையில் மீண்டும் இதன் புத்தம் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
‘பிளாக் பந்தர்’ புகழ் சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் மரணம்
இதற்கிடையே செம்பருத்தி சீரியல் நடிகர் கதிர்வேல் கடந்த ஜூலை 2-ம் தேதி, சிந்து என்பவரை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். அதோடு தனது வருங்கால மனைவியை சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தற்போது அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
கதிர் நடிப்பில் இறங்குவதற்கு முன்பு பல ஆண்டுகளாக வி.ஜே.வாக இருந்தார். பிரபலமான சீரியலான செம்பருத்தியில் அகிலாண்டேஸ்வரியின் இளைய மகன் அருண் என்ற வேடத்தில் கதிர் நடித்தார். இப்போது அவரின் திருமண படங்கள் வைரலாகி வருகின்றன. நடிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை லிஷா, தம்பதியினரின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
4 பொருள்… 2 நிமிடம்…. ஈஸியான கீட்டோ சீஸ் கேக் ரெடி!
தவிர, இந்த லாக்டவுன் காலத்தில் பிரபலங்களின் திருமணங்கள் அனைத்தும் எளியமுறையில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.