சின்னத்திரை நடிகை ஷாலினி விவாகரத்து பெற்றதை போட்டோஷூட் மூலம் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ சீரியல் முலமாக பிரபலமடைந்தவர் நடிகை ஷாலினி. முனீஷ்ராஜ், தர்ஷா குப்தா உள்ளிட்டவர் நடித்த இந்த சீரியலில் ஷாலினி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஷாலினி பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டிருக்கிறார். ஷாலினி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியில் தன் மகள் ரியாவுடன் கலந்துகொண்டார்.
இதையும் படியுங்கள்: மாரியை காப்பாற்ற வரும் முத்துப் பேச்சி: ஜீ தமிழ் சீரியலில் தேவயானி மாஸ் என்ட்ரி

முன்னதாக ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஷாலினி. ஆனால், கணவர் ரியாஸ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், சைக்கோதனமாக நடந்துகொள்வதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்றுவிட்டதை ஷாலினி போட்டோஷூட் மூலமாக அறிவித்துள்ளார். இவரது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஷாலினி அந்தப் போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “குரலற்றவர்களாக உணருபவர்களுக்கு விவகாரத்து பெற்ற பெண்ணின் செய்தி. மோசமான திருமணத்தை விட்டு விலகுவது பரவாயில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கத் தகுதியானவர். ஒருபோதும் குறைவாக உங்களை எண்ண வேண்டாம். உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தி, உங்களுக்காகவும், உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் தேவையான மாற்றங்களை செய்ய தயாராகுங்கள். விவாகரத்து ஒரு தோல்வி அல்ல!!! இது உங்களுக்கு ஒரு திருப்புமுனை மற்றும் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும். திருமணத்தை விட்டுவிட்டு தனித்து நிற்க மிகுந்த தைரியம் தேவை, தனித்து நில்லுங்கள். அதனால் வெளியில் இருக்கும் என்னைப் போன்ற துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பணம் செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil