ஜீ தமிழ் சீரியல் நடிகை ஸ்வாதி சர்மா, தான் எதிர்கொண்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகவே சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள் பலர் தாங்கள் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பலர் அதை வெளியே சொல்ல தயங்கும் நிலையில், ஒரு சிலர் தைரியமாக வெளியில் சொல்லி தங்களிடம் தவறாக நடந்து கொண்டவர்களுக்கு பாடம் புகட்டி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்: விஜய் டி.வி டு கலைஞர் டி.வி: புதிய சீரியலில் பாரதி கண்ணம்மா நடிகை
சில மாதங்களுக்கு முன்பு நடிகை வரலட்சுமி தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நபர் பற்றி கூறியிருந்தார். அதுபோல சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்துவரும் லாவண்யா வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று ஒரு நபர் சொன்னது குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என நினைத்தாலே இனிக்கும் சீரியல் நடிகை ஸ்வாதி சர்மா தான் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார். நடிகை ஸ்வாதி சர்மா முதலில் கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். அவர் கண்டேயா கதே, துரோணா மற்றும் ஃபார்ச்சூனர் போன்ற கன்னட சீரியல்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து ஜீ தமிழ் நினைத்தாலே இனிக்கும் சீரியல் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார். இந்த சீரியலில் பொம்மி கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், ஸ்வாதி சர்மா தான் ஆரம்பகால கட்டத்தில் சந்தித்த அட்ஜஸ்மென்ட் பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார். ஸ்வாதி சர்மா காலேஜ் படித்து முடித்ததும் மாடலிங் மூலமாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது இவருடைய அம்மாவோடு தான் வாய்ப்பு தேடி போயிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு நபர் இவருடைய அம்மா முன்பு வைத்து அட்ஜஸ்மென்ட் பற்றி வெளிப்படையாகக் கேட்டிருக்கிறார். அதற்கு அவருடைய அம்மா அதிர்ச்சியாகி கோபமடைந்து இருக்கிறார். அப்போது சுவாதி வேகமாக கத்தி அந்த நபரை திட்டிவிட்டராம்.
பிறகு வெளியே வந்த சுவாதியிடம் அவருடைய அம்மாவே கோபப்பட்டு இருக்கிறார். இதற்கு தான் இந்த நடிப்பு வேண்டாம் என்று சொல்றது, நான் கூட இருக்கும்போதே உன்னிடம் இப்படி இந்த ஆட்கள் நடந்து கொள்கிறார்கள் என்றால், நீ வெளியே தனியா நடிக்கும் போது என்னவெல்லாம் நடக்கும் என்று அவரது அம்மா பயந்து இருக்கிறார். பிறகு அம்மாவை ரொம்பவே கஷ்டப்பட்டு தான் சமாதானப்படுத்தி நடிக்க வந்ததாக ஸ்வாதி கூறியுள்ளார். மேலும், இந்த ஒரு நிகழ்வை நினைத்து, நினைத்தாலே இனிக்கும் சீரியல் சூட்டிங்காக சென்னைக்கு வருவதற்கு ரொம்பவே பயந்தேன் என்றும் ஸ்வாதி கூறியிருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil