scorecardresearch

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நாயகி மாற்றம்: அவருக்கு பதிலாக இனி இவர்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் மாற்றப்படும் நாயகி.. இனி ஷக்தியாக நடிக்க போவது இவர் தான்.!!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நாயகி மாற்றம்: அவருக்கு பதிலாக இனி இவர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

கணவனால் கைவிடப்பட்ட மீனாட்சி யமுனா, ஷக்தி, துர்கா என்ற தனது மூன்று பெண்களுடன் தனியாக மீனாட்சி மெஸ் ஒன்றை நடத்தி அதன் மூலம் தனது மகள்களின் கனவை நிறைவேற்ற போராடி வருகிறார்.

இதையும் படியுங்கள்: சந்தியா போய் இனியாவாக ரீஎண்ட்ரி : ஆல்யா மானசாவின் புதிய சீரியல் ப்ரமோ

கதையின் நாயகியாக ஷக்தி என்ற கதாபாத்திரத்தில் மோக்ஷிதா என்ற நடிகை நடித்து வர நாயகனாக ஆர்யன் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து திடீரென மோக்ஷிதா விலக போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதுகுறித்து மோக்‌ஷிதா தனது இன்ஸ்டாகிராமில், நான் சக்தியாக நடித்த மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே வந்துவிட்டேன் என்பதை எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். எனது சக நடிகர்கள் அனைவரும் எனக்கு பெரும் ஆதரவாக உள்ளனர், மேலும் எனது தமிழ் பார்வையாளர்கள் அனைவரும், என்னை சக்தியாக ஏற்றுக்கொண்டு இவ்வளவு அன்பைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. தமிழ் உட்பட பல விஷயங்களை இங்கு வேலை பார்த்து கற்றுக்கொண்டேன், எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இனி வரும் நாட்களில் மோக்ஷிதாவிற்கு பதில் ஷக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சௌந்தர்யா ரெட்டி என்ற நடிகை ஷக்தி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இவரது காட்சிகள் திங்கள் முதல் இடம்பெறும் எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும் இவர் ஜீ தெலுங்குவில் ஒளிபரப்பான “படமட்டி சண்டியா ராகம்” (Padamatti Sandya Raagam) என்ற சீரியலில் நடித்த நடிகை தான் இந்த சௌந்தர்யா ரெட்டி எனவும் தெரிய வந்துள்ளது. இவருடைய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Zee tamil tv meenakshi ponnunga serial actress changes updates

Best of Express