Advertisment

ஆரோக்கிய சேது திறந்தநிலை ஆதாரமாக அறிவித்ததால் என்ன நன்மை?

ஆரோக்யா சேது செயலியின் சர்வர் ஆதாரக்குறியீட்டை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆரோக்கிய சேது  திறந்தநிலை ஆதாரமாக அறிவித்ததால் என்ன நன்மை?

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் சில தினங்களுக்கு முன் ஆரோக்கிய சேது செயலியை திறந்தநிலை ஆதாரமாக அறிவித்தது. இதுகுறித்த வெளியிட்ட செய்திக் குறிப்பில்," திறந்தநிலை மென்பொருள் ஆதாரம் என்னும் இந்திய கொள்கைக்கு ஏற்ப, ஆரோக்கிய சேதுவின் ஆதாரக்குறியீடு (Source Code) தற்போது திறந்தநிலை ஆதாரமாக (Open Source) உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தது.  மேலும், செயலியின் ஆன்ட்ராய்டு பதிப்புக்கான ஆதாரக் குறியீடு ஆய்வுக்காகவும், கூட்டு செயல்பாட்டுக்காகவும் https://github.com/nic-delhi/AarogyaSetu_Android.git.-ல் கிடைக்கிறது. செயலியின் ஐஓஎஸ் பதிப்பு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திறந்தநிலை ஆதாரமாக வெளியிடப்படும். அதன் சர்வர் குறியீடு அதன் தொடர்ச்சியாக வெளியிடப்படும். ஆரோக்கிய சேது செயலியின் 98% பயன்பாட்டாளர்கள் ஆன்ட்ராய்டு தளத்தைச் சேர்ந்தவர்கள் " என்று தெரிவித்தது.

Advertisment

ஆரோக்யா சேது செயலியின் ஆதாரக்குறியீடு  ஏன் பொது வெளியில் வெளியிடப்பட்டது ?

ஏப்ரல் 2 ஆம் தேதி செயலியை வெளியிடும் போது, செயலியை மாற்றியமைக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று  செயலியின் விதிமுறைகளில் தகவல்தொடர்பு அமைச்சகம்  குறிப்பிட்டிருந்தது. ஆரோக்கிய சேது செயலி தொடர்பு தடமரிதலை தாண்டி தனியுரிமை பாதுகாப்பு மீறல்  மற்றும் அரசு கண்காணிப்புக்கு வழிவகுக்கும் என பல நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

சைபர் சட்ட வல்லுநர்களும், உருவாக்கும் சமூகத்துக்கு (developer community) வெளிப்படைத்தன்மையை நிலைநாட்ட ஆரோக்கிய செயலியை  திறந்தநிலை ஆதாரமாக அறிவிக்க வேண்டும் என்றும், ஆதாரக் குறியீட்டை பொது வெளியில் விட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து வந்தன.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஆரோக்கிய செயலியை திறந்த நிலை ஆதாரமாக அறிவித்தது. திறமையான இளைஞர்கள் மத்தியில் உள்ள தொழில்நுட்பத்திறனை இதில் ஈடுபடுத்தவும், மேலும்,  வலுவான, பாதுகாப்பான தொழில்நுட்பத் தீர்வை கூட்டாகக் கட்டமைத்து, பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு பெரிதும் உதவவும் என்றும் தெரிவித்தது.

 

இது அரசு கண்காணிப்பு மற்றும் தனியுரிமை பாதுகாப்பு மீறல் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்கிறதா?

இதை தற்போது சொல்வது சரியாக இருக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது  தான் ஆதாரக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள மென்பொருள் உருவாக்குனர்கள் குறியீட்டை வாசித்து பாதிப்புகளை அடையாளம்  காண்பார்கள். புதிய குறியீடுகளை எழுதி அரசாங்கத்திற்கு பரிந்துரைப்பதன் மூலம்  குறைபாடுகள்  சரிசெய்யப்படும்  என்று மொஸில்லா நிறுவனத்தின் பொது கொள்கை ஆலோசகர் உத்பவ் திவாரி கூறினார்.

இருப்பினும், செயலியின் சர்வர் குறியீட்டை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை. தனியுரிமை பாதுகாப்பு மீறல் குறித்த கவலைகளை மேலும் நிவர்த்தி செய்ய சர்வர் குறியீட்டை அரசு உடனடியாக வெளியிடவேண்டும் என்று The Dialogue என்ற சிந்தனை அமைப்பு நிறுவனர்காசிம் ரிஸ்வி தெரிவித்தார்.

மத்திய அரசு வெளியிட்ட ஆரோக்யா சேது வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?

சர்வர் குறியீட்டை திறந்த நிலை ஆதாரமாக்குவதால் என்ன  என்ன நன்மை?

மொபைல் போன்கள் மற்றும் பிற கையடக்க சாதனங்களில் உள்ள எந்தவொரு செயலிக்கும் இணைய சேவை தேவை. தரவை அனுப்புவதும் செயலாக்குவதும் சர்வரில்  செய்யப்படுகிறது. சர்வர் குறியீட்டை அணுகுவதன் மூலம், செயலிக்கு வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் நேரடியாக பிரத்யேகமாக நிர்ணயிக்கப்பட்ட சர்வர்களுக்கு செல்கிறதா?    இல்லையா? என்பதை இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் சரிபார்க்கலாம்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment