Advertisment

பட்ஜெட்டால் தேசிய கவனம் பெற்ற ஐந்து தொல்பொருள் தளங்கள்: சிறப்பு அம்சங்கள் என்ன?

ஐந்து தொல்பொருள் தளங்கள் சிறப்பு தளங்களாக அறிவிக்கப்பட்டு  அவ்வனைத்திலும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
five ‘iconic’ archaeological sites, Adichanallur Tamil Nadu,

five ‘iconic’ archaeological sites, Adichanallur Tamil Nadu,

நேற்றைய மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் - இராகிகரி (ஹரியானா), ஹஸ்தினாபூர் (உத்தரபிரதேசம்), சிவ்சாகர் (அசாம்), தோலவீரா(குஜராத்) ஆதிச்சநல்லூர் (தமிழ்நாடு) போன்ற ஐந்து தொல்பொருள் தளங்கள் சிறப்பு தளங்களாக அறிவிக்கப்பட்டு  அவ்வனைத்திலும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Advertisment

மேலும், கலாச்சார அமைச்சின் கீழ் இந்திய பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனம்  அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ராக்கி கார்க்கி : ஹரப்பா நாகரிகத்தின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாக ராக்கி கார்க்கி கருதப்படுகிறது. தற்போதைய  ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் இந்த அகழ்வாராய்ச்சி  தளம் அமைந்திருக்கிறது. இந்திய துணைக்கண்டத்தில் ஹரப்பன் நாகரிகத்தின் அறியப்பட்ட ஐந்து நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

2013 மற்றும் 2016 க்கு இடையில், ராக்கி கார்க்கியில்  உள்ள கல்லறையில், டெக்கான் கல்லூரியைச் (புனே) சேர்ந்த  வசந்த் ஷிண்டே தலைமையிலான இந்திய-தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள் குழு அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டனர். அந்த அகழ்வாராய்ச்சியில், ஜோடியாக இருந்த இரண்டு மனிதர்கள் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சுவாரஸ்யமாக, ராக்கி கார்க்கி கண்டுபிடிக்கப்பட்ட 62 கல்லறைகளில், இந்த குறிப்பிட்ட கல்லறை மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட  எதிர் பாலினத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டன.

ஹஸ்தினாபூர்: மகாபாரதம் மற்றும் புராணங்களில் ஹஸ்தினாபூர் பற்றிய குறிப்புகள் உள்ளன. அக்கால மனிதர்கள் இங்கு புது வகையான பீங்கான் தயாரித்துள்ளனர் என்பது இங்கு செய்யபப்ட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது. அதற்கு பெயிண்டட் கிரே வேர் என்றும் பெயரிடப்பட்டது. இது ஆரம்பகால இந்தோ-ஆரியர்களின் நினைவுச்சின்னங்களைக் குறிக்கிறது.

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏ.எஸ்.ஐ) அகழ்வாராய்ச்சி கிளையின் கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் பி.பி லால்  தலைமையில்  ஹஸ்தினாபூரில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சிவசாகர்: சிவசாகர் மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. 2000 மற்றும் 2003 க்கு இடையில் கரேங்கர் (தலதல்கர்) வளாகத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டதன் மூலம் வளாகத்தின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பக்கத்தில் புதைக்கப்பட்ட பண்டையக் கால கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

அந்த இடத்தில் காணப்பட்ட கட்டமைப்பு எச்சங்களில் மட்பாண்டங்கள், பாத்திரங்கள், கிண்ணங்கள் உள்ளிட்ட பீங்கான்களும் இருந்தன. டெர்ரகோட்டாவால் செய்யப்பட்ட  புகைப்பிடிக்கும் குழாய்களும் காணப்பட்டன.

 

publive-image

சிவசாகர் மாவட்டத்தில் உள்ள மற்றொரு அகழ்வாராய்ச்சித் தளம் கர்கான் ராஜாவின் அரண்மனை. இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி 2007-2008 காலப்பகுதியில் நடத்தப்பட்டது. வடக்கு-தெற்கு நோக்குநிலையில் இயங்கும் எரிந்த-செங்கல் சுவர், இரண்டு பெரிய வட்ட மர இடுகைகளும் கண்டெடுக்கப்பட்டன

ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பு : டாட்டா குழுமம் முதலீடு செய்ய 'விருப்பம்'

தோலாவீரா: குஜராத்தில் உள்ள தோலவீரா, ரான் ஆஃப் கட்சின் காதிர் தீவில் அமைந்துள்ளது. ராக்கி கார்க்கி இடத்தை போல ஹரப்பன் நாகரிகத்தின் பொருட்கள் தோலாவீரா தளங்களிலும் கண்டெடுக்கப்படுகிறது. ஒரு முழுமையான நீர்திட்ட அமைப்பு இங்கு கண்டுபிடிக்கப்பட்டதால் தோலவீரா மிகவுமே  தனித்துவமானது.

ஹரப்பன் நாகரிகத்தின் போது, தோலாவீராவில்  (தோராயகமாக - 1,200 ஆண்டுகள்) வாழ்ந்த மக்கள் மழைநீர் சேகரிப்பு நுட்பங்களைப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.

ஆதிச்சநல்லூர் : பல ஆண்டுகளாக,  ஆதிச்சநல்லூரில் கண்டரியபப்ட்ட சில முக்கியமான கண்டுபிடிப்புகள் காரணமாக இந்த தளம் அனைவரின்  கவனத்தை ஈர்க்கின்றது:

முதுமக்கள் தாழியில்  (பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள்) கண்டறியப்பட பண்டைய தமிழ்-பிராமி எழுத்துகக்கள்.

முதுமக்கள் தாழிக்குள் ஒரு முழு மனித எலும்புக்கூடு,

உடைந்த மண் பாண்டத்தின் ஒரு துண்டு,

வாழும் குடியிருப்புகளின் எச்சங்கள்

ஆதிச்சநல்லூர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1876 ​​ஆம் ஆண்டில் ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளர் புதைகுழியில் முதுமக்கள் தாழி மூலம் மக்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, அலெக்சாண்டர் ரே என்பவர் 1889 மற்றும் 1905 க்கு இடையில் இந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்தார்.

Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment