/indian-express-tamil/media/media_files/2025/01/25/pwM6k0hNTkaAO8P7z0NZ.jpg)
இங்கிலாந்தில் ஒரு புதிய ஆய்வின்படி, கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு (ADHD) கண்டறியப்பட்ட வயதுவந்தோர்கள் சராசரியாக ஏ.டி.ஹெச்.டி நோயைக் கண்டறியாதவர்களை விட முன்னதாகவே இறக்கின்றனர். ஏ.டி.ஹெச்.டி உடைய ஆண்கள் ஏறக்குறைய ஏழு வயது ஆண்டுகள் குறைவாகவே வாழ்கின்றனர், அதேநேரம் ஏ.டி.ஹெச்.டி உடைய பெண்கள் சராசரியாக ஒன்பது ஆண்டுகள் குறைவாகவே வாழ்கின்றனர் என்று பகுப்பாய்வு கூறுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Adults diagnosed with ADHD have shorter life expectancy: Study
இங்கிலாந்தில் ‘ஏ.டி.ஹெச்.டி கண்டறியப்பட்ட வயதுவந்தோர்களின் ஆயுட்காலம் மற்றும் ஆயுட்காலம் இழந்த ஆண்டுகள்' என்ற ஆய்வு, பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரியில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த எட்டு ஆய்வாளர்கள் குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏ.டி.ஹெச்.டி என்பது ஒரு வளர்ச்சிக் கோளாறு ஆகும், இது செறிவு மற்றும் மனக்கிளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தும். இது பொதுவாக குழந்தை பருவத்தில் கண்டறியப்படுகிறது மற்றும் பெரும்பாலும் இளமைப் பருவத்தில் தொடர்கிறது. மதிப்பீடுகள் வேறுபட்டாலும், உலகளவில் 3-4% வயதுவந்தோர்களுக்கு ஏ.டி.ஹெச்.டி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புதிய ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?
ஆய்விற்காக, இங்கிலாந்தில் ஏ.டி.ஹெச்.டி நோயால் கண்டறியப்பட்ட 30,000 க்கும் மேற்பட்ட வயதுவந்தோர்களுக்கான முதன்மை பராமரிப்பு தரவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அமெரிக்க பொது ஒலிபரப்பு அமைப்பான நேஷனல் பப்ளிக் ரேடியோவின் அறிக்கையின்படி, வயது, பாலினம் மற்றும் முதன்மை பராமரிப்பு நடைமுறை ஆகியவற்றால் பொருந்திய ஏ.டி.ஹெச்.டி இல்லாத 300,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் குழுவை ஒப்பிட்டனர்.
"மக்கள்தொகையின் ஆயுட்காலம் முழுவதும் ஏ.டி.ஹெச்.டி உடைய வயதுவந்தோர்களுக்கு இறப்பு விகிதம் என்னவாக இருக்கும் என்பதை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் இறப்பு தரவுகளைப் பயன்படுத்தினர்" என்று அறிக்கை கூறியது.
ஆய்வின் முடிவுகள் என்ன?
கண்டறியப்பட்ட ஏ.டி.ஹெச்.டி உடைய வயதுவந்தோர்கள் அவர்கள் வாழ வேண்டியதை விட குறுகிய ஆயுளை வாழ்ந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆயுட்காலம் குறைவதற்கு ஏ.டி.ஹெச்.டி நேரடியான காரணம் என்பது சாத்தியமில்லை என்றாலும், கண்டுபிடிப்புகளுக்கு பல சாத்தியமான விளக்கங்கள் உள்ளன, என ஆராய்ச்சியின் மூத்த ஆசிரியரும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியருமான ஜோசுவா ஸ்டாட் தி கார்டியனிடம் கூறினார்.
உதாரணமாக, ஏ.டி.ஹெச்.டி உடையவர்கள் மோசமான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம் மற்றும் அவர்களுக்குத் தேவையான சுகாதாரப் பாதுகாப்பை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
ஜோசுவா ஸ்டோட் தி கார்டியனிடம் கூறினார், "துரதிர்ஷ்டவசமாக, ஏ.டி.ஹெச்.டி உடையவர்கள் அதிக தற்கொலை விகிதங்களைக் கொண்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும்... அவர்கள் புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் உண்மையில் அதிகமாக சாப்பிடுவது போன்ற ஆபத்தான நடத்தைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்."
இந்த கண்டுபிடிப்புகள் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆய்வுக்கு ஏற்ப உள்ளன, இது 2019 இல் ஸேஜ் ஆய்விதழில் (Sage Journals) வெளியிடப்பட்டது. ஏ.டி.ஹெச்.டி உடைய குழந்தைகள் முதிர்வயது வரை இப்பிரச்சனையை அனுபவிக்கும் நிலையில் அவர்களின் ஆயுட்காலம் சுமார் 8.4 ஆண்டுகள் குறைவாக இருந்தது. "ஏ.டி.ஹெச்.டி உடைய வயதுவந்தோர்களின் குறுகிய ஆயுட்காலத்திற்கு குறைந்த வருமானம், குறைவான வருட கல்வி, புகைபிடிப்பதற்கான அதிக வாய்ப்பு, குறைந்த தூக்கம்... மோசமான ஊட்டச்சத்து மற்றும் ஆபத்தான வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணிகள் இருந்தன" என்று என்.பி.ஆர் அறிக்கை கூறியது.
2019 ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் இந்த காரணிகளில் பெரும்பாலானவை மனக்கிளர்ச்சியுடன் தொடர்புடையவை என்று சுட்டிக்காட்டினர், இது சிகிச்சையளிக்கக்கூடியது.
ஆய்வில் 0.32% வயதுவந்தோர்களுக்கு மட்டுமே நோயறிதல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதால், சமீபத்திய பகுப்பாய்வு ஏ.டி.ஹெச்.டி இன் நோய் கண்டறிதலின் பின் தங்கிய நிலை பற்றிய கவலைகளையும் எழுப்பியது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மக்கள்தொகை அடிப்படையிலான கணக்கெடுப்புகளின் அடிப்படையில் ஏ.டி.ஹெச்.டி உள்ளவர்களின் உண்மையான எண்ணிக்கையில் இது ஒன்பது பேரில் ஒருவர்.
கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டியின் (அமெரிக்கா) பேராசிரியரான மேக்ஸ் விஸ்னிட்சர் என்.பி.ஆர் இடம் கூறினார், “நீங்கள் ஏ.டி.ஹெச்.டி-க்கு சிகிச்சையளித்தால், நிர்வாகச் செயல்பாடுகளில் உள்ள சிரமங்களுடன் பணிபுரிய அவர்களுக்குத் தேவையான வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக் கொடுத்தால், அவை மாற்றியமைக்கப்படும். இது உருவாக்கக்கூடிய அனைத்து சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கிறது."
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.